நானே பாய் வீட்டிலிருந்து மோசமான துர்நாற்றம் வருகிறது. இரண்டு நாட்களாக நானே பாயும் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. கிராம மக்கள் வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, நானே தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். மன்னிக்கவும், இரண்டு நாட்களாக தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறார். வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் மக்கள் யாரும் அதிர்ச்சி அடையவில்லை. ஏனெனில் அப்பகுதி மக்களுக்கு அது புதிதல்ல. எப்போதாவது, யாராவது தூக்கிட்டுக்கொண்டால் பதறலாம், ஒப்பாரி வைக்கலாம். தினம் தினம் யாராவது தூக்கிட்டுக்கொண்டு மரணித்தால்...? சாவு அன்றாட நிகழ்வு என்றானபின், அழுது மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது...?
பந்தல்கண்ட் பகுதியும், தற்கொலையும்:
ஆம். நானே பாய் மட்டுமல்ல, அந்த எழுபதாயிரம் ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் பந்தல்கண்ட் பகுதியில் மட்டும், கடந்த 15 ஆண்டுகளில் 18,686 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். நானே பாயின் இறப்பினால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை என்பது அம்மக்களுக்கு நன்கு தெரியும். அரசாங்க கணக்குகளில், இந்த எண்ணிக்கை 18,687 ஆகும். அப்பகுதி பிராந்திய ஊடகங்கள், அவரது படம் போட்டு இரண்டு பத்தி செய்தி வெளியிடும்.இதைத் தாண்டி எதுவும் நடந்துவிடப்போவதில்லை என்பது அம்மக்களுக்கு நன்கு தெரியும்.
பந்தல்கண்ட் பகுதி உத்தரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களைச் சேர்ந்த 13 மாவட்டங்களில் பரந்துவிரிந்து இருக்கிறது. வறட்சி அவர்களுக்கு புதிதல்ல. அதனுடன் வாழவும், சாகவும் பழகியவர்கள் என்றாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக தண்ணீர் பஞ்சம் அப்பகுதியில் உச்சத்தை தொட்டது. பலநூறு ஏக்கர் பயிர்கள் தாகத்தில் மடிந்தன. இதன் காரணமாக விவசாயிகள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர், அதுவும் முடியாதவர்கள் இப்புவியை விட்டே இடம்பெயர்ந்தனர். ஆம், தற்கொலை செய்துகொண்டனர்.

கடந்த ஞாயிற்றுகிழமை, போபாலில் வறட்சி குறித்து விவாதிக்க, குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. உண்மையில் அரசாங்கத்திடமும் எந்த தீர்வும் இல்லை என்றாலும், குறைந்தபட்சம் நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் அரசிற்கு. விவசாயிகள் அந்த கூட்டத்தில் குமுறி தீர்த்துவிட்டனர்.
விவசாயிகள் மத்தியில் வேலை பார்க்கும் சமூக செயற்பாட்டாளர் பிரமோத கரே, “நானே பாய் தற்கொலை, ஏதோ உணர்ச்சி வேகத்தில் எடுத்த முடிவல்ல. ஏறத்தாழ, அவர் நான்கு மாதங்களாக வறுமையுடன் போராடி வருகிறார். அவர் மகனும் வேலை தேடி டெல்லி போனபின், இவர் பிச்சை எடுத்து தான் நாட்களை நகர்த்தி இருக்கிறார். நான் மிகைப்படுத்துவதற்காக இந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை. உண்மையில் அவர் பிச்சையெடுத்துதான் நாட்களை நகர்த்தி இருக்கிறார். கையறு நிலையில்தான் அவர் சாவை தேர்வு செய்திருக்கிறார்...” என்றார்.
ஒரு நாளைக்கு மூன்று தற்கொலைகள்:
சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று தற்கொலைகள் மத்தியபிரதேசத்தில் நடந்து வருகின்றன. 2011 ம் ஆண்டு 1326 விவசாயிகளும், 2012 ம் ஆண்டு 1172 விவசாயிகளும், 2013 ம் ஆண்டு 1090 விவசாயிகளும், 2014 ம் ஆண்டு 826 விவசாயிகளும், 2015 ம் ஆண்டு 581 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர்.
வறட்சி முக்கிய காரணமாக இருந்தாலும், கழுத்தை நெரிக்கும் வங்கிகளும் விவசாயிகளின் தற்கொலைக்கு மற்றொரு முக்கிய காரணம். கடந்த ஞாயிறு நடந்த குறைத்தீர்ப்பு கூட்டத்தில் பேசிய சுகவதி, “என் 27 வயது கணவர், வங்கியில் வாங்கிய ரூபாய் 1.5 லட்சம் கடனை திருப்பி செலுத்த முடியாமல், மே 20 ம் தேதி தற்கொலை செய்து செய்து கொண்டார். அவர் இரண்டு ஏக்கரில் விதைத்த சோயாபீன்ஸ் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், துரதிருஷ்டமாக இவருக்கும் முன்னால் அதுவும் வறட்சியில் இறந்துவிட்டது...” என்றார்.
இதுபோல் துயர்மிகுந்த கதை பந்தல்கண்ட் பகுதியை சேர்ந்த ஒவ்வொரு விவசாயிடமும் சொல்ல இருக்கிறது. சாகர் மாவட்டத்தை சேர்ந்த பாரத் பட்டேலின் அண்ணன், கிணறு வெட்ட வங்கியில் கடன் வாங்கி இருக்கிறார். ஆனால், பல அடிகள் தோண்டியும் ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. தம் குடும்பத்தின் அன்றாட செலவுகளுக்காக, தம் நிலத்தின் ஒரு பகுதியை விற்று உள்ளார். மீண்டும் சோயா விதைப்பதற்காக உள்ளூர் வட்டிக்காரரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். ஆனால், மழை பொய்த்ததால் சோயாவும் விளைச்சலை தரவில்லை. வட்டி எல்லாம் சேர்த்து கடன் தொகை மூன்று லட்சம் ஆகி இருக்கிறது. கடன் அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்துள்ளார். இந்தியா வித்தியாசமான தேசம். பல்லாயிரம் கோடிகள் கடன் வாங்கியவன் சொகுசாக வாழும் போது, மூன்று லட்சம் கடன் வாங்கியவன் தூக்கில் தொங்கும் தேசம்.

எட்டு வயது பழங்குடி சிறுவன் அஜீத் சோரின் கதை இதைவிட துயர் மிகுந்தது. விவசாயம் பொய்த்ததால், குடும்பத்துடன் வேலை தேடி நகரத்திற்கு சென்று, கட்டட தொழிலாளர்களாக வேலை பார்த்து இருக்கிறார்கள். இரவு நேரத்தில் சாலையோரத்தில் தூங்கும் போது, லாரி மோதி அஜீத்தின் அப்பா, அம்மா, மற்றும் அண்ணன் மூவரும் இறந்துவிட்டனர். இப்போது பாட்டியுடன் வாழந்து வருகிறான் அஜீத்.
என்ன செய்யப் போகிறது தமிழகம்...?
இது ஏதோ பக்கத்து மாநிலத்தின் பிரச்னை என்று சுலபமாக கடந்து சென்று விட முடியாது. தமிழகமும் இது போல் ஒரு நெருக்கடியில்தான் இருக்கிறது. ஒன்று அதீத மழையால் பயிர்கள் சேதமாவது அல்லது மழையின்மையால் மகசூல் பாதிக்கப்படுவது என்று விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். கடன் தள்ளுபடி என்பது உண்மையில் நிரந்திர தீர்வல்ல. அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் பெரும்பாலும் பெரும் விவசாயிகள் மட்டும்தான் கடன் தள்ளுபடியை ருசித்து வருகிறார்கள். உண்மையான சிறு, குறு விவசாயிகளுக்கு கடனே கிடைக்காத போது, பிறகு எப்படி கடன் தள்ளுபடி எல்லாம்...? உண்மையாக விவசாயிகள் நல்வாழ்வு மீது அரசுகளுக்கு விருப்பம் இருந்தால், விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும். நீர் ஆதாரத்தை மேம்படுத்த வேண்டும். நெல், கோதுமையை கொள்முதல் செய்வது போல, விவசாயிகளிடமிருந்து சிறுதானியங்களையும் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும். சிறு தானிய உற்பத்தி தமிழகத்தில் பெருகியதற்கு உண்மையில் அரசு காரணமல்ல, தன்னார்வலர்கள் எடுத்த முயற்சிதான் காரணம். அரசு இப்போதாவது விழித்தெழுந்து சிறுதானிய உற்பத்தியை பரவலாக்க வேண்டும். அதற்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
விவசாயிகள் தாளடி சாகுபடியை மறந்து பல ஆண்டுகள் ஆகப்போகிறது. இதில் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்திற்கு திறந்துவிடப்படாததால், குறுவை சாகுபடியும் கேள்விக்குறி ஆகிவருகிறது. தண்ணீர் இருந்தால்தான் திறந்துவிட முடியும் என்ற வாதத்தையும் புறந்தள்ளிவிட முடியாது. ஆனால், நீராதாரத்தை மேம்படுத்த அரசு என்ன செய்து இருக்கிறது...? உண்மையில் பெரிய அணைகளைவிட அந்தந்த இடத்தில் உள்ள பாசன ஏரிகளையும், குளங்களையும் மேம்படுத்துவதுதான் நல்ல தீர்வு என்கிறார்கள் அறிவியலாளர்கள் மற்றும் சூழலியலாளர்கள். கடந்த பத்து ஆண்டுகளாக அரசு புதிதாக ஏற்படுத்தி உள்ள பாசன ஏரிகள் எத்தனை...? அல்லது குறைந்தபட்சம் ஏற்கெனவே இருக்கின்ற ஏரிகளையாவது தூர்வாரி இருக்கிறார்களா...?
இதையெல்லாம் செய்யாமல், விவசாய கடன் தள்ளுபடி செய்வதால் மட்டும் எந்த நிரந்தர பலனையும் கண்டுவிட முடியாது. உண்மையாக தமிழக அரசிற்கு விவசாயிகள் மீது அக்கறை இருக்குமாயின் இதையெல்லாம் உடனடியாக செய்ய வேண்டும் இல்லையென்றால் தமிழகம் இன்னொரு பந்தல்கண்டாக மாறுவதற்கு வெகுநாட்கள் இல்லை.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.