Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2016

உங்கள் இதயத்தை பாதுகாக்கும் உணவுகள் எவையென அறிய விரும்புகிறீர்களா? இதப் படிங்க!!


நம் உடலில் இதயம் என்பது எவ்வளவு முக்கியமான முதன்மையான உறுப்பு என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

காதல் சோகம், மகிழ்ச்சி என எல்லாவற்றிற்கும் இதயத்தை சமபந்தப்படுத்தி சொல்லாத கவிதைகள், பாடாத பாடல்கள் இல்லை. அவ்வளவு ஸ்பெஷலான இதயத்தை எப்படி நாம் காத்திட முடியும். எந்த உணவுகள் இதயத்திற்கு ஃப்ரெண்ட்லியானவை என தெரிந்து கொள்ளவெண்டுமா? இதை தொடர்ந்து படியுங்கள்.

தர்பூசணி :
தர்பூசணியில் லைகோபீன் என்ற நிறமி உள்ளது. அது இதய மற்றும் புற்று நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது என இதய மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோல் தர்பூசணி சிட்ருலின் என்ற பொருளை உற்பத்தி செய்ய உதவுகிறது.

இது ரத்த செல்களைன் பலத்தை அதிகரிக்கச் செய்யும். தர்பூசணியில் பொட்டாசியம், மெக்னீசியம் , விட்டமின் ஏ மற்றும் சி ஆகிய சத்துக்களைக் கொண்டுள்ளது. இவை இதயத்திற்கு பலம் சேர்ப்பவை.

யோகார்ட் :
நம் ஈறுகள் பலவீனமடைந்தால், இதய நோய்கள் வரும் என மருத்துவர்கள் கூருகின்றனர். யோகார்ட் ஈறுகளை பலப்படுத்தும். இது சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட், விட்டமின் மற்றும் நார்சத்துக்களை கொண்டுள்ளது. இதயத்தின் செயல்களை யோகார்ட் ஊக்குவிக்கிறது.

தக்காளி :
தக்காளியில் விட்டமின் ஏ, சி மற்றும் லைகோபீன் போன்றவை உள்ளது. இவை இதயத்திற்கு பலம் தருகிறது. ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைய பெற்றுள்ளது. தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி சாஸ், தக்காளி சாலட் ஆகியவை இதயத்தை பாதுகாப்பவை.



அவகேடோ :
அவகாடோவில் பொட்டாசியம், அதிகம் உள்ளது. விட்டமின் சி, நார்சத்து மற்றும் கரோடினாய்டு ஆகியவை கொண்டுள்ளது. கரோடினாய்டு இதய பாதிப்பினை தடுக்கிறது. அவகாடோ நாம் சாப்பிடும் மற்ற உணவுகளைன் சத்துக்களையும் உடல் உறிஞ்சிக் கொள்ள உதவி புரிகிறது.

பெர்ரி பழங்கள் :
பெர்ரி பழங்கள் உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகப்படுத்துகிறது. இது இதயத்தில் சேரும் கெட்ட கொழுப்புகளை நீக்கி, கல்லீரலுக்கு அனுப்பி விடுகிறது. இதனால் இதய அடைப்பு தடுக்கும்.

பீன்ஸ் :
பீன்ஸ் வகை காய்களில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்ட், ஒமேகா 3 ஃபேட்டி அமிலம், பி காம்ப்ளக்ஸ் ஆகியயவற்றை கொண்டுல்ளது. எல்லா வகையான பீன்ஸ் விதைகள் இதயத்திற்கு வலு சேர்க்கின்றன. ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்பு செல்களை உட்கிரகித்து, செரிமானத்திற்கு உட்படச் செய்கிறது.

வால் நட் :
வால் நட் இதயத்திற்கு மிகவும் நல்லது. ரத்த செல்களை ஆரோக்கியப்படுத்துகிறது. கை நிறைய வால் நட் சப்பிட்டாலும் குறைந்த கொழுப்பே உள்ளது. அதிக நார்சத்துக்களை உடலுக்கு தருகிறது.

சால்மன் மீன் :
சால்மன் மீனில் ஒமேகா 3 உள்ளது. கொழுப்புக்களை குறைக்கிறது. ரத்த உற்பத்தியை பெருக்கிறது. வாரம் ஒரு முறை மீன் சாப்பிடுபவர்களுக்கு 30 சதவீதம் இதய நோய் வருவது குறைவு என ஆராய்ச்சியில் நிருபிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.