Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 2, 2016

தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால் நீங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்.


வெள்ளரிக்காய் என்றாலே பேருந்து நிலையங்களில், கூடையில் வெள்ளரிக்காய், மிளகாய் பொடியுடன் விற்கப்படும் காட்சி உங்கள் நினைவுக்கு வருகிறதா? நல்லது.

அது கோடை காலத்தில் தாகத்தை தணிப்பது போல், பல நன்மைகளை உடலுக்கு செய்கிறது. விட்டமின் சி அதிகம் உள்ளது. நீர்சத்தும் நிறைந்தது. ஆன்டி ஆக்ஸிடென்ட், பொட்டாசியம், கால்சியம் என நிறைய சத்துக்களை கொண்டிருக்கிறது.

வெள்ளரிக்காய் தினமும் சாப்பிட்டால் நீங்கள் இளமையாக இருக்கலாம். வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால் உண்டாகும் பலன்களை பார்ப்போமா?

வெள்ளரிக்காய் ஜூஸின் நன்மைகள் :
வெள்ளரிக்காய் ஜூஸில் அதிக நார்சத்து உள்ளது. அது சிறுகுடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. ஜீரண உறுப்பில் உண்டாகும் நல்ல பாக்டீரியாக்களை பெருக்கச் செய்கிறது. இதனால் பசி நன்றாக எடுக்கும்.

கேன்சரை தடுக்கும் :
பெண்களுக்கு ஊண்டாகும், மார்பக, கருப்பை, மற்றும் ஒவேரியன் புற்று நோய்களை வர விடாமல் தடுக்கிறது.

சரும அழகிற்கு :
கூந்தல் சருமம் மற்றும் நகங்களின் அழகை அதிகமாக்குகிறது. தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால்,ஒரு மாதத்தில் மேனி மெருகேறும். வேண்டுமென்றால் முயன்று பாருங்கள்.



கண்களின் கருவளையத்தை காணாமல் போகச் செய்யும். சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடும்.

அதேபோல், வெள்ளரிக்காயில் உள்ள சிலிகான் என்ற மினரல் உடலின் இணைப்புத் திசுக்களுக்கு போஷாக்கு அளிக்கும். இதனால் சருமம் பொலிவாக, சுருக்கங்கள் இல்லாமல் இருக்கும்.

நச்சுக்கள் அகற்ற :
நம் உடலிலுள்ள நச்சுக்கள் மற்றும் கொழுப்பு செல்களே பல பாதிப்புகளைத் தரும். தினமும் வெள்ளரிக்காய் ஜூஸினை குடித்து வந்தால், எளிதில் கழிவுகள் வெளியேறும். கொழுப்புகள் கரையும்.

வெள்ளரிக்காயுடன் எந்த வகையான காய் மற்றும் பழங்கள் சேர்த்து உணவில் எடுத்துக் கொள்ளலாம். அல்லது பழச் சாறாகவும் குடிக்கலாம்.

உடல் இளைக்க :
உடல் பருமனாக இருப்பவர்கள் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், உடல் இளைத்து விடும். இதில் அதிக நீர் சத்து இருக்கிறது.

கொழுப்பினை கரைக்க தேவையான ஆன்டி ஆக்ஸிடென்ட்டும் உள்ளன. வெள்ளரிக்காய் நீரினை சமன் செய்ய தேவையான எலக்ரோலைட்ஸ் அதிகம் கொண்டுள்ளது.

உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் நிச்சயம் வெள்ளரிக்காய் உதவி செய்யும். முயன்று பாருங்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.