Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 7, 2016

திராவிட்-கங்குலி சாதனை ரன் குவிப்பை முறியடித்த லம்ப், வெசல்ஸ்


நாட்டிங்கம் அணிக்கும் நார்த்தாம்ப்டன் அணிக்கும் இடையே நடைபெற்ற ராயல் லண்டன் கோப்பை 50 ஓவர் முதல் தர லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மைக்கேல் லம்ப், ஹென்ரிக் வெசஸ்ல் ஆகியோர் அதிக ரன்கள் கூட்டணி சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்தப் போட்டி நேற்று நடைபெற்றது.

அதாவது இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டுகளில், 1999 உலகக்கோப்பை போட்டியின் போது இலங்கைக்கு எதிராக திராவிட்-கங்குலி கூட்டணி 318 ரன்களைக் குவித்து சாதனை செய்திருந்தது. அந்த சாதனையை தற்போது முதல் விக்கெட்டுக்காக 342 ரன்கள் குவித்து மைக்கேல் லம்ப், ரிக்கி வெசல்ஸ் ஜோடியினர் முறியடித்துள்ளனர்.

அதே போல் இந்த 50 ஓவர் முதல்தர போட்டியில் நாட்டிங்கம் அணி முதலில் பேட் செய்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 445 ரன்கள் குவித்தது. இதில் மைக்கேல் லம்ப் 150 பந்துகளில் 21 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 184 ரன்களையும், வெசல்ஸ் 97 பந்துகளில் 14 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 146 ரன்களையும் எடுத்து தொடக்க விக்கெட்டுக்காக சாதனை 342 ரன்களைக் குவித்தனர். வெசல்ஸ் தனது சதத்தை 75 பந்துகளில் அடித்த்தார். 342 ரன்களை 39.2 ஓவர்களில் வெளுத்துக் கட்டினர்.

நாட்டிங்கம் ஷயரின் 445 ரன்கள் உலக அளவில் லிஸ்ட் ஏ போட்டியில் இரண்டாவது பெரிய ஸ்கோராகும். 2007-ம் ஆண்டு குளஸ்டர் ஷயருக்கு எதிராக சர்ரே அணி 496 ரன்களை 50 ஒவர்களில் குவித்துள்ளது லிஸ்ட் ஏ சாதனையில் முதலிடம் வகிக்கிறது. அதிக கூட்டணி ரன்களுக்கான உலக சாதனையை வைத்திருப்பவர்கள் கிறிஸ் கெய்ல், மர்லன் சாமுவேல்ஸ். 2015 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இவர்கள் 372 ரன்களுக்கான அபார அதிரடிக் கூட்டணி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் இன்னொரு ஆச்சரியமான அம்சம் என்னவெனில் நாட்டிங்கம் ஷயரின் 445 ரன்கள் இலக்கை துரத்தி நார்தாம்டன் ஷயர் அணி 48.2 ஓவர்களில் 425 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த அணியின் ரோசிங்டன் என்ற தொடக்க வீரர் 69 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 97 ரன்களை எடுத்து அதிரடி தொடக்கம் கொடுக்க, 5-வது டவுனில் இறங்கிய கிளெய்ன்வெல்ட் என்ற வீரர் 63 பந்துகளில் 10 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 128 ரன்களை விளாசினார்.

மொத்தம் இந்தப் போட்டியில் மட்டும் 870 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது இன்னொரு உள்நாட்டு சாதனையாகும். இதுவும் ஒரே போட்டியில் அதிக ரன்கள் குவிப்புக்கான உலக சாதனையை விட 2 ரன்கள்தான் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 2006-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா மோதிய ஒருநாள் சர்வதேச போட்டியில் 872 ரன்கள் குவிக்கப்பட்டது இன்றளவில் உலக சாதனையாக விளங்குகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.