Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 9, 2016

இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட்: லம்ப்-வெஸ்செல்ஸ் ஜோடி 342 ரன்கள் குவித்து சாதனை


ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது.

இதில் நாட்டிங்காமில் நேற்று முன்தினம் நடந்த பகல்-இரவு ஆட்டத்தில் முதலில் ஆடிய நாட்டிங்காம்ஷைர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 445 ரன்கள் குவித்தது. தொடக்க விக்கெட்டுக்கு மைக்கேல் லம்ப் (184 ரன்), ரிக் வெஸ்செல்ஸ் (146 ரன்) ஜோடி 342 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இங்கிலாந்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு 1999-ம் ஆண்டில் உலக கோப்பை போட்டியில் டான்டனில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் ராகுல் டிராவிட்-கங்குலி இணை 318 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

அந்த சாதனை நேற்று தகர்ந்தது. நாட்டிங்காம்ஷைர் அணி 445 ரன்கள் குவித்தது ‘ஏ’ தர ஒருநாள் போட்டியில் உலக அளவில் 2-வது அதிகபட்ச ஸ்கோராகும். 2007-ம் ஆண்டில் சுர்ரே அணி 496 ரன்கள் சேர்த்ததே ‘ஏ’ தர ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக உள்ளது. 2015-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஜோடியான கெய்ல்-சாமுவேல்ஸ் ஆகியோர் ஒரு விக்கெட்டுக்கு 372 ரன்கள் குவித்ததே ஒருநாள் போட்டியில் அதிகபட்ச இணை ரன் குவிப்பாக உள்ளது. பின்னர் ஆடிய நார்த்தம்டன்ஷைர் அணி 48.2 ஓவர்களில் 425 ரன்னில் ஆல்-அவுட் ஆகி 20 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 870 ரன்கள் சேர்த்தன. இன்னும் 2 ரன்கள் எடுத்து இருந்தால் உலக சாதனை படைத்து இருக்க முடியும். 2006-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 872 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.