Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 23, 2016

மாணவர்களுக்கு ரூ.118 ரூபாய்க்கு ஒரு ஜிபி இன்டர்நெட் : பிஎஸ்என்எல் அறிமுகம்


மாணவ, மாணவியர்களுக்கான  மிகவும் குறைந்த கட்டணத்தில்  இணையச் சேவை(டேட்டா) என்ற சிறப்பு சேவையை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவன தமிழ்நாடு தொலைத் தொடர்பு  வட்ட  துணை பொதுமேலாளர் ராஜி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாணவர்களை ஈர்க்கும் வகையில் குறைந்தக் கட்டணத்தில் ஒரு ஜிபி இணையச் சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் சிறப்புத்திட்டத்தின் கீழ் வழங்க உள்ளது. அதன்படி   ஒரு ஜிபி டேட்டா பயன்படுத்த   118 ரூபாய் மட்டுமே கட்டணம். பயன்பாட்டுக்கு காலம் 30 நாட்கள். அத்துடன் 10 ரூபாய் மதிப்பிற்கு கட்டணமின்றி பேசலாம்.

இந்த சேவையின் கீழ் செல்போன் இணைப்பு பெறுபவர்கள்   பிஎஸ்என்எல் நிறுவன இணைப்புகளுக்கு இடையில் நிமிடத்திற்கு 10 காசுகளுக்கும், தனியார் நிறுவன இணைப்புகளுக்கு நிமிடத்திற்கு 30 காசுகளுக்கும் பேசலாம். உள்ளூர் அல்லது வெளிமாநில எஸ்எம்எஸ் ஒன்றுக்கு 15 காசுகள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தகவல் அறியவும், புதிய இணைப்புகளை பெறவும் அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை அணுக வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.