சமையல் பெண்கள் ஏரியானு யார் பாஸ் சொன்னது? குழம்பு செய்றதுல வித்தியாசமான ஆளுங்க பேச்சுலர் பாய்ஸ்தான்! வாங்க அவங்க சொல்ற வித்தியாச ரெசிப்பிகளைப் பார்ப்போம்.
நாயகன் குழம்பு: நாலு பேரு சாப்பிடணும்னா எதுவும் தப்பில்லைதான் கான்செப்ட். தாளிச்ச ரசத்தை சூடு பண்ணி ரெண்டு இட்லிக்கு வாங்கின கடைச் சாம்பாரை கடாய்ல ஊத்தி கொஞ்சமா சாம்பார் பொடியையும் உப்பையும் தூவிக் கொதிக்க வெச்சு இறக்குவாங்க. வெளியில கம்பெனி சீக்ரெட்டை சொன்னப்போ கண்டுபிடிச்சது!
கழனி புளிச்சாறு: சோறு பொங்கின அரிசியோட வடிச்ச தண்ணியில ரெண்டு தக்காளியை நசுக்கிப்போட்டு கொஞ்சூண்டு புளியைக் கரைச்சு கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளிச்சுக் கலந்து கொதிக்க வெச்சா ரெடி. ஊறுகாயும் ஃபுல்பாயில் முட்டையும்தான் இதுக்கு சைடு டிஷ்!

பப்பாளி ரச சாதம்: ஒண்ணும் இல்லை பாஸ். திங்கிறதுக்கு ஒண்ணுமே கிடைக்கலை. பசி, சிறுகுடலைப் பெருங்குடல் தின்னுது. பின்னாடி அனாமத்தா நிற்கிற பப்பாளி மரத்துல ஒரேயொரு பப்பாளி. அப்பாலிக்கா என்னவாகும்? பப்பாளியைத் துண்டு துண்டா வெட்டி தண்ணியில கொதிக்க வெச்சு கொஞ்சமா இஞ்சி, பூண்டு சேர்த்து... சரி வேணாம். மதியானம் மீந்து போன பாக்கெட் ரசத்தை ஊத்தி உப்புப் போட்டு கொதிக்க வெச்சு இறக்கி அதை சோத்துல பிசைஞ்சு சாப்பிட்டா அதான் பப்பாளி ரச சாதம்!
ஒயிட் கேசரி: ரவையை சீனியோட தண்ணி கலந்து கொதிக்க வெச்சுக் கிண்டினா ஒயிட் கேசரி. முந்திரி, கிஸ்மிஸ் பழம்லாம் எங்கேடானு கேட்கக் கூடாது!
முட்டை சாதம்: கொதிச்சுட்டு இருக்கிற சோத்துல நாலஞ்சு முட்டையை உடைச்சு ஊத்தி அப்படியே வடிச்சு அதை ஊறுகாயோட உள்ளே இறக்கணும். குறிப்பு: பீருக்குப் பிறகு சாப்பிட்டால் உங்கள் நாக்கும் மூக்கும் இதன் சுவையை ஏற்றுக்கொள்ளும். இல்லை என்றால் ‘உவ்வேக்...’தான்!

‘ஜெயம்’ ரவி சாதம்: சுடுசோற்றில் தயிர் பாக்கெட்டை ஊற்றிப் பிசைந்து ஒரு ரூபாய் ஊறுகாயை அதில் பிதுக்கி அப்படியே சிவப்பு சாதமாக மாற்றிச் சாப்பிட வேண்டும். முறுக்கு, அப்பளம் கடையில் வாங்கி சப்போர்ட்டுக்கு சேர்த்துக்கொள்வார்கள். ‘எனக்கும் உனக்கும் சம்திங் சம்திங்’ படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு மிளகாய்ப் பொடியை பிசைந்து தின்னக் கொடுப்பாரே பிரபு. அது நினைவில் வந்தால் கம்பெனி பொறுப்பில்லை!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.