Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 24, 2016

ஐரோப்பிய யூனியனை டைவர்ஸ் செய்கிறது பிரிட்டன்!


ஐரோப்பிய யூனியனில் இருந்து  பிரிட்டன் வெளியேறுவதற்கு அந்த நாட்டு மக்கள் 51.8% பேர் ஆதரவளித்துள்ளனர். எதிராக  48.2 % பேர் வாக்களித்துள்ளனர்.

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிப்பதற்கு ஒரு சாரார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  இதையடுத்து, ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக நீடிக்கலாமா, வேண்டாமா என்பதற்காக வாக்கெடுப்பு நேற்று நடந்தது.  மொத்தம் 4.65 கோடி  பேர் வாக்களிக்க பதிவு செய்திருந்தனர். மழை காரணமாக வாக்குப்பதிவு குறைந்தாலும் 68 % பேர் வாக்களித்தனர். அதாவது  3.12 கோடி பேர் வாக்குகளை பதிவு செய்தனர்.

வாக்கெடுப்பில் 51.8 % பேர் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் எனவும்  48.2 % பேர் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனிலே நீடிக்க வேண்டும் எனவும் வாக்களித்துள்ளனர். பிபிசியும் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் என்று கணித்துள்ளது.

பிரிட்டன் என்பது இங்கிலாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கியது.  கடந்த 43 ஆண்டுகளாக பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் நாடாக இருந்து வந்தது. ஐரோப்பிய யூனியனை விட்டு பிரிட்டன் வெளியேறுவதையடுத்து,டாலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு  9 % சரிந்துள்ளது. 1985-ம் ஆண்டுக்கு பிறகு, முதல்முறையாக  பவுண்டின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து உள்ளது .

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற ஆதரவு கிடைத்திருப்பதால், இந்திய பங்குச்சந்தையும் கடும் சரிவை கண்டுள்ளது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 252 புள்ளிகள் குறைந்து 8,018 புள்ளிகளில் வர்த்தகம் நடக்கிறது.  மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 794 புள்ளிகள் குறைந்து 26,207-ல் வர்த்தகம் நடக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.