பெண்களுக்கு மெனோபாஸ் (மாதவிடாய் நிற்றல்) என்பதை தவிர்க்க இயலாததுதான். பொதுவாய் மெனோபாஸ் 45 வயதிலிருந்து ஆரம்பிக்கும். மெனோபாஸ் நேரத்தில் வரும் பிரச்சனைகளை ஹாட் ஃப்ளாஷ் என்று கூறுவார்கள்.
கை கால், நடுக்கம், மயக்கம், உடல் சோர்வு, காரணமில்லாமல் கோபம் வருவது, மனச் சோர்வு, அடிக்கடி வியர்த்தல் இவையெல்லாம் ஏற்படும். இதனால் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான தீர்வு கிடைத்திருக்கிறது. அதுதான் அக்குப் பஞ்சர்.
அமெரிக்காவில் “வேக் ஃபாரஸ்ட் பாப்டிஸ்ட் மெடிக்கல் சென்டரில்” மெனோபாஸ் உள்ளவர்களை ஆராய்ச்சியில் ஈடுபத்தினர். இந்த ஆய்வு சுமார் ஒரு வருடம் நடந்தது.
சுமார் 45 – 60 வயது வரை மெனோபாஸ் உள்ள பெண்கள் 209 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். அவர்களை இரண்டு பிரிவாக பிரித்தனர்.
முதல் பிரிவினருக்கு முதல் 6 மாத காலம் சிறந்த அனுபவம் வாய்ந்த அக்குப்பஞ்சர் நிபுணர்களைக் கொண்டு அக்குப் பஞ்சர் சிகிச்சையை தரப்பட்டது. அடுத்த 6 மாதத்தில் சிகிச்சை தராமல் நிறுத்தப்பட்டது.
இரண்டாம் பிரிவினருக்கு முதல் 6 மாத காலம் சிகிச்சை எதுவும் தரப்படவில்லை. அடுத்த 6 மாத காலம் அவர்களுக்கு அக்குப்பஞ்சர் சிகிச்சை தரப்பட்டது.
ஆய்வு நடந்த ஒரு வருட காலத்தில், அவர்களின் மெனோபாஸ் பிரச்சனைகளின் தீவிரம் குறித்து டைரியில் குறித்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வின் இறுதியில் தெரிய வந்தது என்னெவென்றால், முதல் பிரிவினருக்கு, முதல் 6 மாத அக்குப்பஞ்சர் சிகிச்சையில், அவர்களின் பிரச்சனைகள் குறைந்ததாகவும், அடுத்த ஆறு மாத காலத்தில், சிகிச்சை இல்லாமல் இருந்தும், மெனோபாஸ் பிரச்சனைகள் ஏதும் உருவாகவில்லை எனவும் கூறியுள்ளனர்.
இரண்டாம பிரிவினருக்கு, முதல் ஆறு மாத காலத்தில் மெனோபாஸ் பிரச்சனைகள் அதிகமானதாகவும், அடுத்த ஆறு மாத காலத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையினால், பிரச்சனைகள் படிப்படியாக குறைந்தது எனவும் கூறியுள்ளனர்.
ஆய்வு முடிவில் ஆராய்ச்சியாளர்கள் கூறியது என்னெவெனில், அக்குப்பஞ்சர் சிகிச்சை ஒரு தடவை செய்து கொண்டால், ஆறு மாத காலம் மெனோபாஸ் பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும்.
அதற்கு பின் பிரச்சனைகள் தொடராமல் இருக்க 6 மாதத்திற்கு ஒருமுறை இந்த சிகிச்சை செய்தால் நல்லது என்று கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.