கோமாவில் இருக்கும் நபரை இரு பெண்கள் சொந்தம் கொண்டாடிய வழக்கில் டெல்லி நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. டெல்லியில் பெண் ஒருவர் கோமாவில் இருக்கும் தனது கணவரை மற்றொரு பெண் கடத்தி வைத்திருப்பதாகாவும், அந்த பெண்ணிடம் இருந்து தனது கணவரை மீட்டு தருமாறும் நீதிமன்றத்தை அணுகினார்.
உடனே இது தொடர்பாக விசாரணை நடத்த போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையில் அந்த கோமா நபர் ஒரு பெண்ணின் வீட்டில் இருப்பதும், அந்த பெண்ணுக்கு ஒரு மகன் இருப்பதும் தெரியவந்தது.
மேலும், கோமாவில் இருப்பவரை தன் கணவன் தான் என்று அந்த குறிப்பிட்ட பெண் உறுதியாக தெரிவித்துள்ளார். கோமாவில் இருக்கும் ஒருவருக்கு இரு பெண்கள் சொந்தம் கொண்டாடுவதால் குழம்பி போன நீதிபதிகள் அந்த பெண்ணையும் அவரது மகனையும் அழைத்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையின் முடிவில் இடைக்கால தீர்ப்பாக ஒரு விசித்திரமான தீர்ப்பு ஒன்றை நீதிபதிகள் வழங்கினர்.
‘கோமாவில் இருக்கும் ஆண் தொடர்ந்து இப்போது இருக்கும் அதே வீட்டில் இருக்கலாம் என்றும், அதே சமயம் வழக்கு தொடுத்த பெண் வாரம் ஒருமுறை ஒரு மணிநேரம் கணவன் என சொந்தம் கொண்டாடும் நபரை பார்க்கலாம் எனவும் தீர்ப்பளித்தனர்.
மேலும், உண்மையான மனைவி யார் என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்படும் வரை இந்த தீர்ப்பு நடைமுறையில் இருக்கும் என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்த மாதம் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.