Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 16, 2016

தெருநாய் கடித்து பார்வை குறைபாடு அடைந்த சிறுவனை நேரில் அழைத்து ஆறுதல் கூறிய நடிகர் மம்மூட்டி


தெருநாய் கடித்ததில் கண் பார்வை குறைபாடு அடைந்த சிறுவனை நடிகர் மம்மூட்டி நேரில் அழைத்து ஆறுதல் கூறினார்.

தெருநாய் கடித்தது

எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் திருக்காரக்குடி பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவருடைய மனைவி அம்பிலி. இவர்களது மகன் தேவானந்த் (வயது 7). சம்பவத்தன்று சிறுவன் தேவானந்த் தனது வீட்டிற்கு முன்பு விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த தெருநாய் ஒன்று திடீரென சிறுவன் மீது பாய்ந்து அவனை கடித்து குதறியது.

இதனால் வலி தாங்க முடியாமல் தேவானந்த் அலறி துடித்தான். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் தாய் அம்பிலி ஆகியோர் நாயை விரட்டி, சிறுவனை மீட்டனர். மேலும் நாய் கடித்து, குதறியதில் சிறுவன் வலது கண் அருகே காயம் ஏற்பட்டது.

தீவிர சிகிச்சை

இதையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தேவானந்த்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும் கண் அருகே பலத்த காயம் ஏற்பட்டதால் சிறுவனுக்கு கண்ணிற்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனால் சிறுவனுக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டது. இதுகுறித்து விவரம் அறிந்த நடிகர் மம்மூட்டி சிறுவனின் குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் ஆறுதல் கூறினார்.

ஆறுதல்

பாதிக்கப்பட்ட சிறுவன் நடிகர் மம்மூட்டியின் தீவிர ரசிகன் ஆவான். இதனால் கடந்த சில மாதங்களாக மம்மூட்டியை காண விருப்பம் தெரிவித்தான். இதுகுறித்து விவரம் அறிந்த நடிகர் மம்மூட்டி கோட்டயத்தில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்பு தளத்துக்கு சிறுவன் தேவானந்தை நேரில் அழைத்தார்.

அங்கு தனது பெற்றோருடன் சென்ற சிறுவன் நடிகர் மம்மூட்டியை கண்டு மகிழ்ச்சியடைந்தான். சிறுவனுக்கு மம்மூட்டி ஆறுதல் கூறியதுடன் பேக் மற்றும் சீருடை வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் பார்வை குறைபாட்டை போக்க நடைபெற உள்ள அறுவை சிகிச்சைக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.