ஜம்மு- காஷ்மீரில் பாய்ந்தோடும் ஜீலம் நதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது. இதில் படகோட்டி தன்னுயிரை நீத்து சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றினார்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வார்கள். அப்போது ஜீலம் நதியில் வாடகை படகு மூலம் பயணம் செய்து இயற்கை காட்சிகளை பார்த்து ரசிப்பது வழக்கம்.
ராஜ்பாக்கில் வசித்து வரும் குலாம் மொகமது குரூ என்பவர் ஜீலம் நதியில் படகு ஓட்டி வருகிறார். நேற்று மாலை நேரத்தில் இவரது படகில் சில சுற்றுலாப் பயணிகள் ஏறினார்கள். இவர் அவர்களை அழைத்துச் செல்லும்போது ஃபதே கடல் நடைபாலம் அருகே திடீரென படகு கவிழ்ந்து தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது.
உடனே, 52 வயதான குலாம் நீரில் குதித்து படகை கவிழ விடாமல் பார்த்துக்கொண்டதோடு, சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை மற்றொரு மோட்டார் படகுக்கு மாற்றினார். பின்னர், கரைக்கு திரும்பும்போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரழிந்தார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் கடற்படை குழுவினருடன் சேர்ந்து குலாம் உடலை தேடிவருகிறார்கள். இன்று மாலை வரை அவரது உடல் கிடைக்கவில்லை. சுற்றுலாப் பயணிகளின் உயிர்களை மீட்க தன்னுயிரை நீத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.