Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 27, 2016

மனைவி வீடு திரும்பிடாத ஆத்திரத்தில் கோவில் சிலையை சேதப்படுத்திய கணவர் கைது


மத்திய பிரதேசத்தில் பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி வீடு திரும்பவில்லை என்ற ஆத்திரத்தில் அனுமன் கோவிலில் இருந்த சிலையை உடைத்த கணவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

இது பற்றி நகர போலீஸ் சூப்பிரெண்டு ஷஷிகாந்த் கங்கானே கூறும்பொழுது, பல்டா பகுதியில் பழமையான கேதாபதி அனுமன் கோவில் உள்ளது.  இங்கு உள்ள சிலையை சேதப்படுத்தியதற்காக மனோஜ் பஞ்சாரா (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட சண்டையில் பஞ்சாராவின் மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.  அவரை வீட்டிற்கு திரும்ப அழைத்து வர பஞ்சாரா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தன.  அதன்பின் அனுமன் கோவிலில் சென்று அவர் வேண்டியுள்ளார்.

அவரது அனைத்து வேண்டுதல்களுக்கு பின்னரும் மனைவி திரும்பி வராத ஆத்திரத்தில் நேற்றிரவு அனுமன் சிலையை உடைத்துள்ளார் என கூறியுள்ளார்.  இதனை தொடர்ந்து மனோஜ் கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்தினை அடுத்து அந்த கோவிலை சுற்றி சில வலது சாரி அமைப்புகள் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி இன்று போராட்டத்தில் ஈடுபட்டன.  கோவிலை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.