Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 1, 2016

பணம் கொடுக்காததால் தொழிலாளியை தாக்கிய திருநங்கை போலீஸ் விசாரணை


கொள்ளேகால் டவுனில், பணம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த ஒரு திருநங்கை தொழிலாளியை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநங்கை மீது வழக்கு

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் டவுனில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடையில் கீர்த்தி ராஜ் என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் அவர் பணியில் இருந்தபோது, அந்த கடைக்கு ஒரு திருங்கை வந்தார். அவர், கீர்த்தி ராஜிடம் தனக்கு பணம் கொடுக்குமாறு கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கை, கீர்த்தி ராஜை தாக்கி, அவரது மர்ம உறுப்பை கையால் பிடித்து நசுக்கியதாக தெரிகிறது.

இதில் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இதையடுத்து அந்த திருநங்கை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் இதுபற்றி கொள்ளேகால் டவுன் போலீசில் கீர்த்தி ராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் திருநங்கை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிதாக 1000 பஸ்கள்

*சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பீமனபீடு கிராமத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள புட்டசாயம்மா என்பவரின் வீடு இடிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட புட்டசாயம்மாவிற்கு நிவாரண நிதி வழங்குவதாகவும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

*சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் நகரசபைக்கு உட்பட்ட பஸ்திப்புரா பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை சட்டவிரோதமாக சிலர் பட்டா செய்து கொடுத்துவிட்டதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் நகரசபை கமிஷனர் லிங்கராஜு விசாரணை நடத்தினார். அப்போது அந்த இடத்தை ராபின்சன், பிரமிளா, விக்டர் ஆகியோர் தங்கள் பெயருக்கு பட்டா பெற்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கமிஷனர் அதை ரத்து செய்தார். மேலும், அவர்களுக்கு பட்டா மாற்றம் செய்து கொடுத்த அதிகாரி பிரதீப் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.

*சாம்ராஜ்நகர்-மைசூருவுக்கு இடையே ஓடும் அரசு பஸ்கள் மிகவும் பழுதடைந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து சாம்ராஜ்நகர் அரசு பஸ் பணிமனை அதிகாரி அசோக்குமார் கூறுகையில், தற்போது சாம்ராஜ்நகருக்கு புதிதாக 1000 பஸ்களை வாங்கி உள்ளோம். அவைகள் வந்தவுடன் பழைய பஸ்கள் அனைத்தும் மாற்றப்படும் என்று கூறினார்.

விபத்தில் கிளீனர் சாவு

* மைசூருவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆதிதிராவிடர் நல அமைப்பினர் திரண்டு வந்து, அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 10 ஆயிரம் கிராம உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு முறையை கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

* கோலார் தாலுகா சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சத்தனி கேட் பகுதியில் நேற்று காலை 2 லாரிகள் மோதி கொண்டன. இந்த விபத்தில் லாரி கிளீனர், முல்பாகல் தாலுகா பாயசதிம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (25) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.