ஏமாந்த ஏழை மக்களுக்கு பண ஆசைகாட்டி, சிறுநீரகங்களை வாங்கி, விற்கும் தரகுக் கும்பலை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
கிழக்கு டெல்லியில் உள்ள சரிதா விஹார் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சிறுநீரகங்களை வாங்கி, விற்கும் தரகுக் கும்பல் செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தவண்ணம் இருந்தது. இதையடுத்து, அந்த தனியார் ஆஸ்பத்திரியை கடந்த சிலநாட்களாக மாறுவேடத்தில் போலீசார் கண்காணித்து வந்தனர்.
நேற்றிரவு அதிரடியாக அந்த ஆஸ்பத்திரிக்குள் புகுந்த போலீசார், சிறுநீரகங்களை வாங்கி, விற்கும் தரகுவேலை செய்துவந்த இரு பெண்கள் உள்பட மூன்று டாக்டர்களையும், மூன்று இடைத்தரகர்களையும் கைது செய்தனர். கைதான இடைத்தரகர்கள் சமீபத்தில் டெல்லியை சேர்ந்த நான்கு பேருக்கு மாற்று சிறுநீரகம் கிடைக்க ஏற்பாடு செய்ததாக தெரியவந்துள்ளது. பிடிபட்ட ஆறுபேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.