கேரள மாநிலம் கொல்லத்தில் கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட கோர்ட்டு ஆகியவை ஒரே வளாகத்தில் உள்ளது. நேற்று காலை கோர்ட்டு வளாகத்தில் அதே பகுதியை சேர்ந்த சாபு (வயது 61) என்ற முதியவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பயன்படுத்தப்படாத ஒரு ஜீப்பில் குண்டு வெடித்தது. இதில் சாபு காயம் அடைந்தார். மேலும் கோர்ட்டு கட்டிடத்தின் ஒரு பகுதி மற்றும் ஜீப் சேதம் அடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது குண்டு வெடித்த ஜீப்பில் இருந்து ஜெலட்டின் குச்சிகள், பேட்டரிகள் மற்றும் வெடிகுண்டுக்கு தேவையான எலக்ட்ரானிக் பொருட்கள் கிடந்தன.
இச்சம்பவம் பற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், இது சக்தி குறைந்த வெடிகுண்டு என்றாலும், எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்திய விதத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இதில் தீவிரவாதிகளுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.