Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 28, 2016

சிரியாவை சேர்ந்த 5 பத்திரிகையாளர்களை கொலை செய்து வீடியோ வெளியிட்ட் ஐ.எஸ்


சிரியாவை சேர்ந்த 5 பத்திரிகையாளர்களை கடத்தி சென்ற ஐ.எஸ் அமைப்பினர் அவர்களை தூக்கிலேற்றி கொலை செய்துள்ளனர். இங்கிலாந்தை  தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் மனித உரிமைகள் கண்காணிப்பு குழு (SOHR) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிரியா பத்திரிகையாளர்கள் 5 பேரை தங்களுக்கு எதிராக செய்திகள் வெளியிட்டதாக கூறி ஐ.எஸ் அமைப்பினர் கடத்தி சென்றனர்.

தொடர்ந்து 2 மாதங்கள் அவர்களை சித்திரவதை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே டிசம்பர் மாதத்தில் பத்திரிகையாளர்கள் 5 பேரையும் தூக்கிலேற்றி ஐ.எஸ் அமைப்பினர்கொலை செய்துள்ளனர். சிரியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளதியர் இல் ஷோர்  என்ற ஐ.எஸ் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பகுதியில் நடந்தேறும் சம்பவங்களை இவர்கள் 5 பேரும் தொடர்ந்து செய்திகளாக வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது பத்திரிகையாளர்களை கொலை செய்துள்ள வீடியோ பதிவை வெளியிட்டுள்ள ஐ.எஸ் அங்குள்ள ஊடகங்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள்  உடல்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களின் மரண செய்தியை வெளியிட்டால் அது ஐ.எஸ் அமைப்பினரின் கோபத்தை தூண்டும் வகையில் அமையலாம் என அவர்களது குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர்கள் மீது அதிகமாக தாக்குதல் நடத்தப்படும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது சிரியா. இங்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இதுவரை 95 பத்திரிகையாளர்களை பல்வேறு காரணங்களால் கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.