பீஜிங், லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட 50 பளுதூக்கும் வீரர்- வீராங்கனைகளிடம் செய்யப்பட்ட பரிசோதனையில் 20 பேர் சிக்கியுள்ளனர்.
ஊக்கமருந்து விவாகரம் உலக அளவில் பெரிய பூதாகரமாக வெடித்துள்ளது. 2008-ம் ஆண்டு சீனாவின் பீஜிங் மற்றும் 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வீரர்- வீராங்கனைகளுக்கு எடுக்கப்பட்ட மாதிரி மீண்டும் மறுபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதில் பெரும்பாலான வீரர்- வீராங்கனைகள் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. குறிப்பாக ரஷியாவைச் சேர்ந்த தடகள வீரர்கள் அதிகளவில் ஊக்கமருந்து பிரச்சினையில் சிக்கினார்கள். இதுகுறித்து ரஷியா கூறுகையில் ரியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் ரஷியாவை கீழே தள்ளுவதற்குதான் இந்த சதி நடக்கிறது. இதனால் ரியோவில் கலந்து கொள்வதா? வேண்டாமா? என்று வாக்கெடுப்பு நடத்த இருக்கிறோம் எனறு பகீங்கரமான அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தடகளம் விளையாட்டு வீரர்களை தாண்டி பளுதூக்கும் வீரர்களும் இந்த சோதனையில் சிக்கியுள்ளனர். சர்வதேச ஒலிம்பிக் பெடரேஷன் அமைத்துள்ள ஊக்கமருத்துக்கு எதிரான கொள்கையின்படி 50 பேருக்கு மறுபரிசோதனை செய்யப்பட்டது. இதில் பீஜிங் ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட 10 பேருடைய டெஸ்டும், லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட 10 பேருடைய டெஸ்டும் பாசிட்டிவாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.
‘‘ஊக்க மருந்து பயன்படுத்தப்பட்ட வீரர்களுக்கெதிராக கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் அனைத்தையும் சர்வதேச பளுதூக்கும் பெடரேசன் கடைபிடிக்கும்’’ என சர்வதேச பளுதூக்கும் பெடரேசன் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.