2012-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்குப்பின் ஒட்டுமொத்த பார்வையும் ஆரோக்கியமான உடல்நிலை (பாடி பில்டர்) பற்றியே இருந்தது. ஆரோக்கியமான உடல் பேட்டிங் செய்வதற்கு மட்டுமல்ல, பீல்டிங்கையும் மேம்படுத்தும் என்று விராட் கோலி கூறியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி கேப்டனாகவும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தனது பேட்டிங்கால் அசத்தியும் வருபவர் விராட் கோலி. இந்திய கிரிக்கெட்டில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் முதன்மையான இடத்தில் இருக்கும் இவர், அதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.
தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது குறித்து விராட் கூறுகையில் ‘‘இதுவெல்லாம் 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடருக்குபின் நடந்ததுதான். அதுவரைக்கும் நான் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தவில்லை. அதுவரைக்கும் உடற்பயிற்சி குறித்தோ, உணவு கட்டுப்பாடு குறித்தோ, எப்படி பயிற்சி எடுப்பது, அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் நான் தெரிந்து வைத்திருக்கவில்லை. 2012-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்குப்பின் எனது உடல் நிலை குறித்து கவனிக்க தொடங்கினேன்.
2012-க்குப்பிறகு எனது வாழ்க்கைமுறையை உருவாக்கினேன். அடுத்த நிலைக்கு செல்வதற்கு எனது உடலை புதியதாக மாற்ற விரும்பினேன். ஏனென்றால், சராசரி மனிதன் போன்று இருக்க விரும்பவில்லை. இந்த உலகத்தின் சிறந்த வீரராக விரும்பினேன். ஆகவே, இது எனது மனநிலையாக இருந்தது. ஆனால், 2012-ம் ஆண்டுக்கு முன் எந்த உடற்பயிற்சியும் எடுக்கவில்லை.
உங்கள் உடலை நீங்கள் கட்டுக்கோப்பாக வைதிருக்கும்போது, எதையும் உங்களால் செய்ய முடியும் என்ற நினைப்பு வரும். உங்களுக்கு என்னால் ஒரு உதாரணம் கொடுக்க முடியும். நான் சிறப்பான, அதாவது விரைவான பீல்டர் இல்லை. எந்தவொரு பீல்டிங் இடத்திலும் சிறப்பாக செயல்பட்டது கிடையாது. தற்போது உடல்நிலையை தேற்றி லைட்டாகவும், ஸ்ட்ராங்காகவும் ஆகியுள்ளேன். இந்த சந்தேகங்களை (சொதப்பலான பீல்டிங்) தாண்டி வந்து, தற்போது உடற்திறனை சரியாக வைத்து, உணவில் கவனம் செலுத்துவது வழக்கமாகிவிட்டது’’ என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.