வங்காளதேசத்தில் சாமியார் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
வங்காளதேசத்தில் 65-வயது இந்து சாமியார் காலையில் கோவிலுக்கு செல்லும் போது பைக்கில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பலால் கழுத்து அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
வங்காளதேசத்தில் சமீப காலமாக வன்செயல்கள், படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சிறுபான்மையினர், வெளிநாட்டினர், கல்வியாளர்கள், வலைத்தள கட்டுரையாளர்கள், கல்வியாளர்கள் போன்றோர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இதுபோன்ற தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு மற்றும் அல்-கொய்தாவினர் என்று தங்களை கூறிக்கொள்பவர்கள் பொறுப்பு ஏற்று வருகின்றனர். ஆனால் வங்காளதேச அரசோ தங்கள் நாட்டில் ஐ.எஸ். அமைப்பின் செயல்பாடு கிடையாது என்று மறுத்து வருகிறது. கடந்த ஞாயிறு அன்று தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரி பாபுல் அக்தர் என்பவரின் மனைவி மக்முதா பேகம் கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை நடத்துவதாக வங்காளதேச அரசு கூறியது.
இந்நிலையில் சாமியார் கொலை செய்யப்பட்டு உள்ளார். இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மற்றும் மதசார்பின்மை ஆர்வலர்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் தொடர்கிறது.
மேற்கு ஜினாய்க் மாவட்டத்தில் சாமிபார் ஆனந்தா கோபால் கங்குலி 9:30 மணியளவில் கோவிலுக்கு சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர்கொண்ட கும்பல் வழிமறித்து உள்ளது. அந்த கும்பல் தங்களிடம் இருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து ஆனந்தாவின் கழுத்தை அறுத்துவிட்டது என்று போலீஸ் அதிகாரி கோபிநாத் கங்ஜிலால் கூறிஉள்ளார். தீவிரவாதிகளின் கைவரிசையே என்றும் குற்றம் சாட்டிஉள்ளார். சாமியாரின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.