Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 6, 2016

வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடங்கியது


இஸ்லாமியர்களின் மூன்றாவது கடமையான புனித ரமலான் நோன்பு வளைகுடா நாடுகளில் இன்று தொடங்கியது.

முஹம்மது நபி காட்டித்தந்த இஸ்லாம் மார்க்கத்தை கடைபிடிக்கும் முஸ்லிம்களின் ஐம்பெரும் முக்கிய கடமைகளில் ரமலான் நோன்பு மூன்றாவது கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரமலான் முதல் பிறையில் இருந்து ‘ஈதுல் பித்ர்’ எனப்படும் ரம்ஜான் பண்டிகை வரை, தினந்தோறும் அதிகாலையில் எழுந்து, உண்டுமுடித்து, பின்னர் அன்று பகல் பொழுது முழுவதையும் துளிநீர்கூட அருந்தாமல் இறைவனின் நினைவாகவே தொழுகை உள்ளிட்ட நற்காரியங்களில் ஈடுபடுவதை மரபு வழியாக இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் பின்பற்றி வருகின்றனர்.

அவ்வகையில், இந்த ஆண்டின் ரமலான் பிறை வளைகுடா நாடுகளில் நேற்றுமாலை தென்பட்டது. இதையடுத்து, இன்று அதிகாலையில் இருந்து வளைகுடா நாடுகளில் வாழும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கத் தொடங்கியுள்ளனர். முன்னதாக, நேற்றிரவு வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கடைவீதிகள் களைகட்டியிருந்தன.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கடைகளுக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். பழமையான முக்கிய மசூதிகளில் நேற்றிரவு நடைபெற்ற ‘தராவீஹ்’ தொழுகையில் திரளான மக்கள் பங்கேற்றனர்.

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டில் மட்டும் நேற்று பிறை தென்படாததால் இன்றிலிருந்து நோன்பு தொடங்குகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.