Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 28, 2016

திக்... திக்... திக்...எந்நேரமும் இடியும் அபாயத்தில் கு.மா.வா., குடியிருப்பு பராமரிப்பு இல்லாததால் 18 ஆண்டுகளில் பலம் இழப்பு


தாம்பரம் அருகே கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், பராமரிப்பில்லாததால், 18 ஆண்டுகளில் பலம் இழந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

சென்னையில், பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் குடிசை அமைத்து வசித்து வந்தவர்களுக்கு, 1999ல், கிழக்கு தாம்பரம், 13வது வார்டு, எம்.ஜி.ஆர்., தெருவில், மூன்று தளங்கள் கொண்ட, எட்டு தனித்தனி கட்டடங்களில், மொத்தம், 128 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

18 ஆண்டுகளில்...
பயனாளிகளுக்கு வீடுகளை ஒப்படைத்த பின், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், கட்டடங்களில் எந்த பராமரிப்பு பணிகளையும் செய்யவில்லை. தற்போது, கட்டடங்களில் மேல் பூச்சு பெயர்ந்தும், சுவர்களில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டும் உள்ளன. பால்கனி, மாடிப்படியின் பக்கவாட்டு சுவர்கள் விரிசலடைந்து தள்ளாடுகின்றன.

நேற்று முன்தினம் இரவு, கட்டடத்தின் மூன்றாம் தளத்தில், சுவர் மீது சாய்ந்த வாலிபர்கள், கைப்பிடி சுவர் உடைந்ததால், கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். தாம்பரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.ராஜா சம்பவ இடத்திற்கு வந்து, பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். பின், 'குடியிருப்புகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என,
உறுதியளித்து சென்றுள்ளார்.

கட்டடங்களை இன்னும் சில ஆண்டுகள் பராமரிக்காமல் விட்டுவிட்டால், கைப்பிடிச் சுவர் உடைந்ததைப் போல, மற்ற கட்டடங்களும் உடைந்து விழும். மவுலிவாக்கம் கட்டடத்தைப் போல, இந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பும் பெரும் பாடத்தைப் புகட்டிய பின் தான், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவரா?

குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறியதாவது:
குடிசை மாற்று வாரியம், 1997ல், கட்டடம் கட்டும் பணியை துவங்கியது. 1999ல், பயனாளிகளிடம் வீடுகள் ஒப்படைக்கப்பட்டன. கட்டடம் பயன்பாட்டிற்கு வந்து, 18 ஆண்டுகள் கூட முடியவில்லை. பராமரிப்புப் பணிகள் செய்யாததால், மேல்பூச்சு பெயர்ந்து விழுவதும், சுவர்கள் இடிந்து விழுவதும் தொடர்கதையாகி உள்ளது. இதனால், அந்த கட்டத்தில் வசிக்க
அச்சமாக இருக்கிறது.

கட்டடத்தை, 35 ஆண்டுகளுக்கு, குடிசை மாற்று வாரியம் தான் பராமரிக்க வேண்டும். எந்த அதிகாரிகளும் இங்கு எட்டி கூட பார்ப்பதில்லை. மலக் கழிவு வெளியேற வசதி இல்லாததால், குடியிருப்பு வளாகத்திலேயே சாக்கடையுடன் தேங்கி நிற்கிறது. குடிநீர், மின்சாரம் என, எந்த கட்டமைப்பு வசதிகளும் சரியில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

சுவர் விழுந்த பின்னணியில் மோதலா?
குடிசை மாற்று வாரிய கட்டடத்தின், மூன்றாவது மாடியில் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, அங்கு குடியிருக்கும் அன்பு, 26, உட்பட மூவர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, பால்கனி கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்தது. மூவரும், 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து விசாரிக்கும் சேலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜிடம் கேட்டபோது, ''வாலிபர்கள் மூவரும் சண்டை போட்டுள்ளனர். அப்போது சுவர் மீது சாய்ந்ததில் தான், இடிந்து விழுந்துள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.