காதலிக்குமாறு வற்புறுத்தியதால் தூக்க மாத்திரைகள் சாப்பிட்ட பெண் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காதலிக்குமாறு வற்புறுத்தல்
திருவள்ளூரை அடுத்த குண்டுமேடு புதுவட்டாரம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது பெண். இவரை குண்டுமேடு பகுதியை சேர்ந்த சதீஷ்(21) என்பவர் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் சதீஷ் தொடர்ந்து அந்த பெண்ணை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண்ணிடம் சதீஷ் தகாத வார்த்தையால் பேசி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார்.
தூக்க மாத்திரை
இதனால் மனவேதனை அடைந்த அந்த பெண் தன்னுடைய அறைக்கு சென்று அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரது வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அந்த பெண்ணின் தந்தை வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.