Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 17, 2016

300 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளில் கதவுகள் இல்லாத கிராமம்


இந்தியாவில் மராட்டிய மாநிலத்தின் ஒரு கிராமத்தில் அனைத்து வீடுகள் மற்றும் கடைகளும் கதவுகளே இல்லாமல் 300 ஆண்டுகளாக கட்டப்படுகிறது. ஆனாலும், அங்கு எந்தவித திருட்டு பயமும் இல்லை. சனிபகவானே பாதுகாப்பு என நம்புகின்றனர்.

வீடு என்றாலே கதவு பாதுகாப்பு அவசியம் என கருதும் நம்மால் இதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆனால், சனி சிங்னாபூர் கிராமத்தினரின் நிஜமான நடைமுறை இதுதான்.

அந்த கிராம மக்கள் அனைவரும் சனி கடவுளை வணங்குகின்றனர். அந்த கடவுளின் மீது உள்ள பக்தியின் அதீத நம்பிக்கையால் இப்படிச் செய்கின்றனர். அதற்கு வியப்பான ஆரம்பமும் உண்டு.

300 ஆண்டுகளுக்கு முன் கடும் மழையினால் பனாஸ்னாலா ஆற்றில் பெரும்வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளத்தில் கனமான பலகை போன்ற 1.5 மீ. நீளமுள்ள கரியபாறை மிதந்து வந்தது.

அது சிங்னாபூர் கிராமத்தின் அருகே வரும்போது, கரை ஒதுங்கியது. அதை வினோதமான பொருளாக கண்ட சிலர் குச்சியால் குத்திப்பார்த்தனர். அதிலிருந்து ரத்தம் வழிந்தது. மக்கள் வியந்தனர்.

அன்று இரவு கிராம தலைவரின் கனவில் சனி கடவுள் தோன்றினார், கரை ஒதுங்கியது எனது சிலைதான். அது மகத்தான சக்தி படைத்தது.

அதை இந்த கிராமத்திலே வைத்து வழிபடுங்கள். அது உங்கள் எல்லோரையும் காப்பாற்றும். கிராமத்தினர் வீடுகளிலும் கதவுகள் வேண்டாம். அப்போது தான் தடையில்லாமல் நான் வந்து அருள் செய்ய முடியும். அனைத்துக்கும் நானே பாதுகாப்பு என்று உறுதியளித்து கிராம தலைவரை ஆசிர்வதித்து மறைந்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.