‘எனது கணவர் காணாமல் போனதற்கு தூண்டுதலாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காணாமல் போன பட அதிபர் மதனின் முதல் மனைவி சிந்து, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், எனது கணவர் காணாமல் போனதற்கு சிலரது மிரட்டலும், தூண்டுதலுமே காரணம் என்றும், அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
முதல் மனைவி புகார்
சினிமா பட அதிபர் மதன் தற்கொலை செய்யப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு திடீரென்று தலைமறைவாகி விட்டார். அவர் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமா வட்டாரத்திலும் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது. மதனின் 2-வது மனைவி சுபலதா நேற்று முன்தினம் தனது கணவரை கண்டுபிடிக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.
நேற்று மதனின் முதல் மனைவி சிந்து கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து கண்ணீர் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
காணாமல் போன எனது கணவர் மதனை கண்டுபிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 1996-ம் ஆண்டு எனக்கும் அவருக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு பிளஸ்-1 படிக்கும் வேதிகா என்ற மகள் இருக்கிறாள். அவர் காணாமல் போனதை அடிப்படையாக வைத்து பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தவறான தகவல்கள் செய்திகளாக வெளிவருகின்றன. அவர் பண மோசடி செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக அவதூறு பரப்புகிறார்கள். மோசடி செய்யும் அளவுக்கு அவர் மோசமானவர் அல்ல.
மிரட்டல்
எஸ்.ஆர்.எம்.கல்விக்குழுமத்தின் தலைவர் பச்சமுத்துவிற்கு எனது கணவர் மிகவும் நெருக்கமாக இருந்தார். இது சிலருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவருக்கு மிரட்டல்கள் வந்தன. அந்த மிரட்டலும் சிலரது தூண்டுதலும்தான், எனது கணவர் காணாமல் போனதற்கு காரணமாக இருக்க வேண்டும் என்றுகருதுகிறேன். இது தொடர்பாக உண்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
சிந்துவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. கண்ணீர் விட்டு அழுதபடியே இருந்தார். அவருடன் வந்த வக்கீல் மட்டுமே நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
கார் கண்டுபிடிப்பு
பட அதிபர் மதனின் பி.எம்.டபிள்யூ கார் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் விமானத்தில் ஏறி டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்துள்ளார். அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பதுதான் மர்மமாக உள்ளது. மதனின் முதல் மனைவி சிந்து கொடுத்த புகார் மனு மீது விசாரணை நடத்த அண்ணாநகர் துணைக்கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.