Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 3, 2016

ஹிப் ஹாப் நடனம் ஆடி அசத்தும் முஸ்லிம் பெண்கள் குழுவினர்


ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உட்பட பழமைவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் முஸ்லிம் பெண்களை பொறுத்தவரையில் பொது இடங்களில் செல்லும் போது பர்தா அணிவது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுண்டு.

ஆனால் இவற்றை எல்லாம் தகர்க்கும் வண்ணம் அமெரிக்காவில் முஸ்லிம் பெண்கள் குழுவினர் ஹிப் ஹாப் நடனத்தில் கலக்கி வருகின்றனர்.

We're Muslims, Don't Panic என்ற குழுவே இவ்வாறு அசத்தி வருகின்றது. ஆசிரியர், பாடகர், டான்ஸ் மாஸ்டர் என பன்முகம் கொண்ட அமீரா சேக்கட் என்பவரால் கடந்த 2011ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

மதக் கட்டுப்பாடுகளின் படி பர்தாவுடன் மேடையில் தோன்றும் இந்த குழுவினர் அமெரிக்க மக்களின் ஆஸ்தான நடனக் குழுவாக மாறியுள்ளனர்.

உலகம் முழுவதும் முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை போக்கவும், நேர்மறையான எண்ணத்தை உருவாக்கவும் பாடுபடுவதாக தெரிவித்துள்ளார் அமீரா



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.