பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பெற்றவர்கள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதால் அதுகுறித்து உரியவிசாரணை நடத்த அம்மாநிலக் கல்வித்துறை மந்திரி அசோக் சௌத்ரி உத்தரவிட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. கலைப்பிரிவில் முதலிடம் பிடித்த ரூபி ராய் என்ற மாணவியிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர். ‘‘அடுத்து என்ன படிக்கப்போகிறீர்கள்?’’ என்று கேட்டபோது ‘பொலிடிக்கல் சயின்ஸ்’ என்பதை ‘புரொடிகல் சயின்ஸ்’ என்று உச்சரித்தார். ‘அந்த பாடம் எதைப்பற்றியது?’ என்றபோது அவர் கூறிய பதில், ‘அது சமையல் கலை பற்றியது’ என்பதாகும். சரியாக உச்சரிக்கத் தெரியாத மாணவி மாநிலத்தில் முதலிடம் பெற்றது குறித்த 'வீடியோ' `வைரலாக' பரவியது. இதனை பார்த்த கல்வித்துறை அதிகாரிகள் திகைத்து போயினர்.
அறிவியல் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவர் சவுரப் குமார். அவருக்கு எலெக்டிரான், புரோட்டான் என்றால் என்னவென்றே தெரியவில்லை. அவர் அறிவியல் பாடப்பிரிவில் முதலிடம்.
கலை மற்றும் அறிவியல் பிரிவில் முதலிடம் பெற்ற இருவரும் ஒரே வைசாலி மாவட்டத்தில் உள்ள பகவான்புர் நகரில் உள்ள பிஸுன் ராய் கல்லூரியில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மாநில கல்வித்துறை மந்திரி இது குறித்து கூறியதாவது:
பீகார் மாநிலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். கல்வி நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு மாணவ மாணவிகளின் எடுத்துள்ள மதிப்பெண்கள் ஆராயப்படும். விசாரணையில் முடிவில் தவறு செய்த கல்வி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.