ரெயில்களில் குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்களின் நலனுக்காக, ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் குழந்தைகளுக்கான உணவு பதார்த்தங்கள் விற்கும் திட்டம் இன்று முதல் அமல்
ரெயில்களில் குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்களின் நலனுக்காக, ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் குழந்தைகளுக்கான உணவு பதார்த்தங்கள் விற்கப்பட வேண்டும் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று, இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அவர் அறிவித்தார். அதன்படி, ‘ஜனனி சேவா’ என்று பெயரிடப்பட்ட இத்திட்டம் இன்று அமலுக்கு வருகிறது. டெல்லியில் நடக்கும் விழாவில், இத்திட்டத்தை சுரேஷ் பிரபு தொடங்கிவைக்கிறார்.
திட்டத்தின்படி, சில குறிப்பிட்ட ரெயில்களிலும், நாடு முழுவதும் அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களில் உள்ள இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.) கடைகளிலும் குழந்தைகளுக்கான உணவு பதார்த்தங்கள் விற்பனை கட்டாயம் ஆக்கப்படும்.
பேபி புட்ஸ், சூடான பால், வெந்நீர் உள்ளிட்ட குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும். மேலும், சில குறிப்பிட்ட ரெயில்களின் சமையல்கூட பெட்டிகளில், கேக், பிஸ்கட், சிப்ஸ், சாக்லேட் உள்பட குழந்தைகள் விரும்பும் அனைத்து தின்பண்டங்களும் விற்பனைக்கு கிடைக்கும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.