சென்னை,
உள்கட்சி விவகாரத்தில் தன்னுடைய பெயரை தேவை இல்லாமல் பயன்படுத்தவேண்டாம் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத்
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் செய்யாறு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இவர் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி கட்சியில் இருந்து நீக்குவதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடியாக அறிவித்தார்.
இளங்கோவன் அறிக்கை
இதுதொடர்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்ட அறிக்கையில், “நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் குறித்து முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாசின் மைத்துனர் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கிற வகையில் கருத்துகளை கூறியிருக்கிறார்.
அவதூறுகளை பரப்புகிற நோக்கத்தில் வெளிப்படையாக கருத்துகளை கூறியிருப்பதை கட்சி விரோத நடவடிக்கையாக கருதுகிறோம். எனவே, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்” என்று கூறப்பட்டிருந்தது.
அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி விவகாரத்தில் தனது பெயரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பயன்படுத்தியதற்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரத்தில் என்னுடைய பெயரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேவை இல்லாமல் பயன்படுத்துகிறார். என்னுடைய பெயரை பயன்படுத்துவதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
காங்கிரஸ் கட்சி விவகாரத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இனிமேல் என்னுடைய பெயரை பயன்படுத்த வேண்டாம். இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என்று எச்சரித்துக் கொள்கிறேன்” என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.