June 8, 2016
பொகோ ஹராம் தாக்குதல்: நைகரிலிருந்து 50 ஆயிரம் பேர் வெளியேற்றம் -
மேற்கு ஆபிரிக்காவின் நைகர் பகுதியில் பொகோ ஹராம் ஆயுதப் படையினரின் பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள சுமார் 50 ஆயிரம் மக்கள் குறித்த பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி இருப்பதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையகம் அறிவித்துள்ளது. தென்-கிழக்கு நைகரிலுள்ள பொசோ நகரில் இராணுவ புறக் காவலரண்கள் மீது பொகோ ஹராம் ஆயுதக் குழுக்கள் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட தாக்குதலின் எதிரொலியாக அங்குள்ள மக்கள் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அகதி முகவர் நிலைய பேச்சாளர் குறிப்பிட்டார். இவ்வாறு பொசோ நகரிலிருந்து வெளியேறும் மக்கள் ஆபத்து மிகுந்த திறந்தவெளியில் தங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த பகுதியானது சமூக பொருளாதார சீரழிவை ஏற்படுத்தும் பாதுகாப்பற்ற இடமாகவே தென்படுகிறது. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பொகோ ஹராம் தாக்குதலில் 30 நைஜீரிய பொதுமக்கள் மற்றும் இரு நைஜீரிய படை வீரர்கள் ஆகியோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
பொகோ ஹராம் தாக்குதல்: நைகரிலிருந்து 50 ஆயிரம் பேர் வெளியேற்றம் -
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 08, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 08, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.