Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 21, 2016

குடிகார கணவனுக்கு பாடம் புகட்ட கண்ணில் ஃபெவிகுவிக்கை ஊற்றிய மனைவி


மத்திய பிரதேசத்தில் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்த கணவன் தூங்கும்போது அவரது கண்ணில் ஃபெவிகுவிக்கை ஊற்றியுள்ளார் மனைவி.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ். அவரது மனைவி விஜயலட்சுமி. சந்தோஷுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. மதுவுக்கு அடிமையான அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

குடிபோதையில் வரும் அவர் தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். குடிப்பழக்கத்தை விட்டுவிடுமாறு விஜயலட்சுமி வலியுறுத்தியும் அவர் கேட்கவில்லை. இதனாலேயே கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

சொல்லி சொல்லி பார்த்த விஜயலட்சுமி தனது கணவருக்கு ஒரு பாடம் புகட்ட நினைத்தார். இதையடுத்து சந்தோஷ் தூங்கும்போது அவரது கண்ணில் ஃபெவிகுவிக் பசையை ஊற்றிவிட்டார்.

பெவிக்விக் ஊற்றப்பட்ட பிறகு சந்தோஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.