Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 28, 2016

வைட்டமின் சி குறைபாட்டின் அறிகுறிகளும்… அதை சரிசெய்யும் அற்புத உணவுகளும்…


உடலின் சீரான செயல்பாட்டிற்கு வைட்டமின் சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் சமீபத்திய சர்வே ஒன்றில், உலகில் நிறைய மக்கள் வைட்டமின் சி குறைபாட்டினைக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. மற்ற ஊட்டச்சத்துக்களைப் போல், நம் உடலால் வைட்டமின் சி-யை உற்பத்தி செய்ய முடியாது.

எனவே வைட்டமின் சி உடலுக்கு வேண்டுமானால், அதை உணவுகளின் மூலம் தான் பெற முடியும். உடலில் வைட்டமின் சி குறைவாக இருந்தால், அதனால் பல்வேறு தீவிரமான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என உடல்நல நிபுணர்களும் கூறுகின்றனர்.

உடலில் வைட்டமின் சி குறைவாக இருந்தால் ஒருசில அறிகுறிகள் தென்படும். அதனைக் கொண்டு தெரிந்து கொண்டு, இக்குறைபாட்டினைப் போக்க உதவும் உணவுப் பொருட்களை தினமும் உட்கொண்டு வந்தால், நிச்சயம் வைட்டமின் சி குறைபாட்டினை விரைவில் சரிசெய்யலாம்.

அறிகுறிகள்
* வறட்சியான சருமம் * முடி வெடிப்பு * காயங்கள் குணமாவதில் தாமதம் * ஈறுகளில் வீக்கம் மற்றும் நிறம் மாறி இருப்பது * ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவது * கடுமையான மூட்டு வலிகள்

குடைமிளகாய்
குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. எனவே வைட்டமின் சி குறைபாட்டினைத் தவிர்க்க குடைமிளகாயை உணவில் தினமும் சிறிது சேரத்து வந்தால் போதும். மேலும் நிபுணர்கள், ஒரு நாளைக்கு 100 கிராம் வைட்டமின் சி போதுமானது என்று கூறுகின்றனர்.

கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்திலும் வைட்டமின் சி உள்ளது. அதிலும் ஒரு கொய்யாப்பழத்தில் 200 மிகி வைட்டமின் சி உள்ளது. மேலும் இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் ஓர் சுவையான பழமும் கூட.



கிவி
வைட்டமின் சி குறைபாடு அதிகம் கொண்டவர்கள் கிவி பழத்தை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஏனெனில் இப்பழத்தை உட்கொண்டால், வைட்டமின் சி உடலில் வேகமாக அதிகரிப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

ப்ராக்கோலி
ப்ராக்கோலியில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. 100 கிராம் ப்ராக்கோலியில் 89,2 மிகி வைட்டமின் சி உள்ளது.

ஆரஞ்சு
அனைவருக்குமே தெரியும் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி வளமாக உள்ளது என்று. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை உட்கொண்டு, வைட்டமின் சி குறைபாட்டில் இருந்து விடுபடுங்கள். மேலும் சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, கிரேப் ஃபுரூட்டிலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

பப்பாளி
வெப்பமண்டல பழமான பப்பாளியில் வைட்டமின் சி ஏராளமான அளவில் உள்ளது. ஆகவே உங்களுக்கு வைட்டமின் சி குறைபாடு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் சிறிது பப்பாளி பழத்தை உட்கொண்டு வாருங்கள்.

ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரியிலும் சிட்ரஸ் பழங்களைப் போல் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆகவே ஸ்ட்ராபெர்ரி சீசனின் போது தவறாமல் அப்பழத்தை வாங்கி சுவைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.