Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 21, 2016

விஜயகாந்த் குடும்பம் வீட்டிலேயே முடக்கம்


தேர்தல் படுதோல்வியால், விஜயகாந்த் மட்டுமின்றி, அவரது ஒட்டுமொத்த குடும்பமும், விரக்தியில் மூழ்கியுள்ளது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் வீடு, சென்னை, விருகம்பாக்கம், கண்ணம்மாள் தெருவில் உள்ளது. விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் வீடு, சாலிகிராமம், வெங்கடேஷ்வரா காலனியில் உள்ளது.

சென்னையில் இருக்கும் நாட்களில், கோயம் பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு செல்வது விஜயகாந்தின்வழக்கம். அரும்பாக்கத்தில் உள்ள தன் அலுவலகத்திற்கு செல்வது, சுதீஷ் வழக்கம்.

கடந்த இரண்டு நாட்களாக, இவர்கள் இருவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். உளுந்துார் பேட்டையில், மூன்றாம் இடத்திற்கு தள்ளப் பட்டதுடன், 'டிபாசிட்'டையும் பறிகொடுத்த தால், விரக்தியின் உச்சத்தில், விஜயகாந்த் இருக்கிறார். விஜயகாந்த் மட்டுமின்றி, அவர் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய் பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோரும் மன வருத்தத்தில் உள்ளனர்.

இதனால், இவர்கள் அனைவரும், தங்கள் வழக்கமான பணிகளில் ஆர்வம் காட்டாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். சுதீஷ் வீட்டிலும், இரண்டு நாட்களாக இதே நிலை தான் நீடிக்கிறது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.