Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 2, 2016

தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பேன்: ட்விட்டரில் விஜயகாந்த் தில்!



தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பது என் பழக்கம்.சினிமாவில் மட்டுமல்ல, நேரிலும்.' என்று ட்விட்டர் வலைத்தளத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதிவிட்டுள்ளார்.
'

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் விஜயகாந்த் தனது ஃபாலோயர்ஸூடன் உரையாடினார்.தமிழகம் முழுக்க தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களுக்கு பல கட்டமாக வாக்குச் சேகரித்து வரும் விஜயகாந்த், முதல்முறையாக ட்விட்டரில் பிரசாரம் மேற்கொண்டார். இதற்கு ட்விட்டர் பக்கத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்களில் விஜயகாந்த் மட்டுமே ட்விட்டர் பிரசாரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்ததக்கது. இதற்கென #TweettoVijayakant   என்ற ஹாஷ் டேக் உருவாக்கப்பட்டுள்ளது.




ஆயிரக்கணக்கானோர் ட்விட்டர் மூலம் விஜயகாந்துடன் கலந்துரையாடினார்.  அவரிடம்,தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணி   ஆட்சிக்கு வந்தால் என்ன என்ன செய்வீர்கள் என்பது உள்ளிட்ட ஏராளமான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு அவர் உடனுக்குடன் பதில் அளித்தார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.