Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 3, 2016

ஐபிஎல்: பந்துவீச்சில் மாயாஜாலம் காட்டும் குஜராத் வீரர்! (வீடியோ)


ஐபில் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணியில் இடம்பெற்றிருக்கும் ஷிவில் கவ்ஷிக்கின் பந்து வீச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்புரில் பிறந்த ஷிவில் கவ்ஷிக்கின் வயது 20. இதுவரை முதல் தர கிரிக்கெட் போட்டியில் கூட விளையாடாத இவர், ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியில் இடம் பெற்றுள்ளார். இடக்கை சுழற்பந்து வீச்சாளரான இவர், தனது உடலை வளைத்து, தலையை குனிந்தபடி பந்தினை வீசுகிறார். இது தென் ஆப்பிரிக்க முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பால் ஆடம்சின் பந்துவீச்சு போன்று இருப்பதாக அனைவரும் தெரிவிக்கின்றனர்.




இவரின் இந்த வித்தியாசமான பந்துவீச்சு முறை அனைவரையும் கவர்ந்துள்ளது. ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் இந்த அணிக்கு பஞ்சாப் அணி முட்டுக்கட்டையாக உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.