"நம் மாநிலத்தின் நிலை இலவசங்களை நம்பி இருக்கிறது.இலவச அரிசி இருந்தால்தான் வாழமுடியும் என்ற நிலை எவ்வளவு அவமானகரமானது. இன்னும் எத்தனை நாளைக்கு அரசால் இலவச அரசி போட்டுவிடமுடியும்? " என்று கேள்வி எழுப்பியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் பயனற்றது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தவமணி பத்மாநாபனை ஆதரித்துப் பேசி வாக்குச் சேகரித்த சீமான், வாக்காளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
புலியூர் பகுதியில் பேசிய அவர்," நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தால் என்ன பயன் இருக்கிறது.எத்தனை ஏரிகள் குளங்கள் தமிழ் நாட்டில் தூர் வாரப்பட்டுள்ளன. எத்தனை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது.அப்படி பயன் இல்லாத திட்டங்கள் எதற்காக.சொந்த நாட்டு மக்களை இலவச அரிசிக்காக கையேந்த வைத்துள்ளது எப்படி ஒரு அரசின் சாதனையாகும்.
எங்கள் ஊரில் கண்மாய்க் கரையில் அமர்ந்து ஆண்கள் சீட்டு ஆடுகிறார்கள். பெண்கள் பல்லாங்குழி ஆடுகிறார்கள். கேட்டால் நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டம் என்கிறார்கள். ஆனால் அதே கிராமத்தில் விவசாய வேலை செய்ய ஆள் இல்லை என்ற நிலை உள்ளது. பொருளாதரத்தை வளர்க்க திட்டமிடாத அரசு சும்மா சோம்பி உட்கார்ந்து இருக்க பணம் கொடுக்கிறது.இந்தத் தேசம் எப்படி வளரும்...?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
மேலும் அவர் கூறுகையில், " ஊழல் பெருகி நாட்டின் முன்னேற்றம் சீரழிந்துள்ளது அதனால் மாற்றத்தை கொண்டுவர இந்தத் தேர்தலை வாய்ப்பாக பயன்படுதிக்கொள்ளவேண்டும்" என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.