ஆந்திராவை கலங்கடிக்கும் செம்மர கடத்தலில், கோல்கட்டாவை சேர்ந்த பெண் ஒருவர் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள செம்மரங்களை வெட்டி, பலர், வெளி நாடுகளுக்கு கடத்தி வருகின்றனர். இதனால், ஆந்திர போலீசார், சிறப்பு குழுக்களை அமைத்து, செம்மர கடத்தலில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்து வருகின்றனர்.
வங்கி கணக்கு
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவை சேர்ந்த பெண் ஒருவர், இணையதளம் மூலம் செம்மரங்களை விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார், கோல்கட்டா சென்று, சங்கீதா என்ற பெண் வீட்டில் சோதனை
நடத்தினர். அதில், ஆறு வங்கி கணக்கு புத்தகங்கள், இரண்டு வங்கி, 'லாக்கர்' சாவிகள் இருந்தன.
சோதனையில், செம்மர கட்டை ஏற்றுமதி, இறக்குமதியை, சங்கீதா கவனித்து வருவது தெரிய வந்துள்ளது. இதனால், அவரை கைது செய்து, அங்கு உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சித்துார் அழைத்து வர, போலீசார் முயன்றனர்.
ஆனால், சங்கீதாவை, ஜாமினில் எடுக்க, கோல்கட்டா நீதிமன்றத்திற்கு, 25 வழக்கறிஞர்கள் வந்ததால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும், விசாரணைக்காக, சங்கீதாவை சித்துார் அழைத்து வர, போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.
நடவடிக்கை
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: செம்மர கடத்தலில் ஈடுபட்டு வந்த லட்சுமணன், கடந்த மாதம் கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை நடத்தியதில் அவனுக்கு உதவி புரிந்த, காதலி சங்கீதாவின் விவரம் கிடைத்தது. அதன் அடிப்படையில், சங்கீதாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.