தமிழக மின்சார வாரியம் ரூ.60 ஆயிரம் கோடி கடனில் இருக்கும்போது, அ.தி.மு.க. எப்படி 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " அ.தி.மு.க வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் செயல்படுத்த முடியாத பலவிஷயங்களை கூறி உள்ளது. உதாரணமாக தமிழக மின்சார வாரியம் ரூ.60 ஆயிரம் கோடி கடனில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அ.தி.மு.க. கூறுகிறது. இதனை எப்படி வழங்க முடியும்.
மேலும் விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 80 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தை பா.ஜனதா அரசு ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. இதுவரை இந்த திட்டத்துக்காக 15 லட்சம் விவசாயிகள் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இலவச இணையதள வசதி செய்து தரப்படும் என்று அ.தி.மு.க அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இரண்டரை லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் இலவசமாக இணையதள வசதி ஏற்படுத்தும் பணியில் மத்திய பா.ஜனதா அரசு ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தை பல்வேறு மாநிலங்கள் செயல்படுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு கூட தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு தராததால் இங்கு இந்த திட்டம் முடங்கி போய் உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலின் போது, 3 மாதத்தில் மின் மிகை மாநிலமாக தமிழகம் மாறும் என்றும், வீடு தோறும் 20 லிட்டர் மினரல் வாட்டர் வழங்குவேன் என்றும் ஜெயலலிதா கூறினார். ஆனால் இவற்றையெல்லாம் அவர் நிறைவேற்றவில்லை. இப்போது தெரு குழாய்களில் கூட முறையாக தண்ணீர் வருவதில்லை என்பது தான் உண்மையான விஷயம். தமிழகத்தில் உள்ள இரு திராவிட கட்சிகளும் போட்டி போட்டு இலவசங்களை அறிவித்து வருகின்றன. கடந்த காலங்களில் கிடைத்த வரவேற்பு போன்று, இந்த தேர்தலிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். இலவசங்களை சொல்லி இனியும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.
அ.தி.மு.கவும், தி.மு.கவும் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவோம் என்று கூறுகிறது. இதைவிட உலக மகா காமெடி வேறு எதுவும் இருக்க முடியாது. லோக் ஆயுக்தா ஏற்படுத்தினால், இந்த இரு திராவிட கட்சிகளின் முக்கிய தலைவர்களும் சிறைக்கு தான் செல்ல வேண்டும். இருகட்சிகளுக்கும் மதுவிலக்கு குறித்து பேச எந்த தகுதியும் இல்லை" என்று கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.