தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் உரிய அடையாள அட்டை இல்லாதவர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் செல்போன் எடுத்து வரவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் 232 தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் துணை ராணுவ படை வீரர்கள் கண்காணிப்பில் 68 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் 68 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
வாக்கு எண்ணுவதற்காக 68 மையங்களிலும் மொத்தம் 3,236 மேஜைகள் போடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு தொகுதியில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் வைத்து எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் தமிழக அரசு ஊழியர்கள் 9,621 பேரும், மைக்ரோ அப்சர்வர்களாக மத்திய அரசு ஊழியர்கள் 3,971 பேர் என மொத்தம் 13,592 பேர் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் வரும் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தேர்தல் ஆணையம் அளித்துள்ள உரிய அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அடையாள அட்டை இருந்தாலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்ல கூடாது. வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.