அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு கட்சிகளும் பணத்தை அள்ளி இறைப்பதால், அந்தத் தொகுதியில் மே 23-ம் தேதிக்கு தேர்தல் தள்ளிவைக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். நியாயமாகப் பார்த்தால் இது ஒரு ஜனநாயகப் படுகொலை. அரவக்குறிச்சி மக்களுக்கு தேர்தல் ஆணையம் இழைக்கும் அநீதி. ஆம், தமிழகம் முழுக்கவே பணம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது.
திருவாரூரில் போட்டியிடும் தமிழின தலைவர் கலைஞர் கருணாநிதி தொடங்கி, ஆர்.கே.நகரில் போட்டியிடும் நிரந்தர முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதா வரை அவர்களின் ஆட்கள் பணத்தை அள்ளி வீசித்தான் ஓட்டுக்களை விலைக்கு வாங்கிக் கொண்டுள்ளனர். 5 முறை 3 முறை முதல்வராக கோலோட்சியிருந்தபோதும் பணத்தைக் கொடுத்து மட்டுமே ஓட்டு வாங்ககூடிய நிலையில்தான் இருக்கின்றன இரண்டு கட்சிகளும்.
தமிழகமே இப்படி இருக்கும்போது, அரவக்குறிச்சி மீது மட்டும் ஆணையம் அதிரடி காட்டுவது, அந்த மக்களை கேவலப்படுத்துவதாகத்தானே அர்த்தம்!
இதைப்பார்த்துவிட்டு, சே... இந்த திராவிட கட்சிகள் நாட்டையே சீரழித்துவிட்டன என்று புலம்பி தீர்க்காதீர்கள். இவர்களுக்கு முந்தைய காங்கிரஸ் காலத்திலும் பண விளையாட்டுக்கு பஞ்சமில்லை என்பதுதான் உண்மை. 1960களில் அண்ணாவின் மேடைப்பேச்சுகளைக் கேட்டால் அந்த பணநாயகம் பற்றி நன்றாகவே உணர முடியும். ஆக தேர்தலுக்கு தேர்தல் பணம் பரிணாம வளர்ச்சி கண்டு வருகிறது. 32 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தத் திரைப்பட பாடலே இந்த பரிணாம வளர்ச்சிக்கு சாட்சி!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.