புனேயை சேர்ந்த தேவிதாஸ் பிரபானே என்ற விவசாயி தான் உற்பத்தி செய்த வெங்காயத்தை மாவட்ட வேளாண் விளைபொருள் சந்தையில் விற்றிருக்கிறார். ஆனால், அவருக்கு ஒரு கிலோ வெங்காயத்திற்கு 1 ரூபாய் 60 காசுகள் மட்டுமே விலையாக கிடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபானேவுக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் ரூ.80 ஆயிரம் செலவில் வெங்காயத்தை விளைவித்தார். கடந்த மே 10-ந்தேதி தான் உற்பத்தி செய்த 952 கிலோ வெங்காயத்தை 18 சாக்கு பைகளில் ஒரு லாரியில் ஏற்றி புனேயை சேர்ந்த வேளாண் விளைபொருட் சந்தைக்கு அனுப்பி வைத்தார். ஆனால், அதற்கு விலையாக அவருக்கு ரூ.1,532.20 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதிலும், ரூ.91.35 காசுகளை கமிஷனாக இடைத்தரகர்கள் எடுத்துக் கொண்டுவிட்டனர். ஆட்களுக்கான கூலியாக ரூ.59-ம், மற்ற பல செலவுகளாக ரூ.18.55 மற்றும் ரூ.33.30 காசுகளும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. வெங்காயத்தை ஏற்றிச் சென்ற லாரி டிரைவருக்கு ரூ.1,320 செலுத்தப்பட்டுவிட்டது. இறுதியாக, பிரபானேவுக்கு வெறும் 1 ரூபாய் மட்டுமே எஞ்சியிருக்கிறது.
சென்ற 4 மாதங்களாக அந்த ஒரு டன் வெங்காயத்தை விளைவிக்க அவர் உழைத்த கடின உழைப்பிற்கு எவ்வித பலனும் இல்லாமல் போனது குறித்து கவலை தெரிவித்துள்ளார் பிரபானே. வெங்காயத்தை விளைப்பதற்கு செலவிட்ட தொகையை கூட தன்னால் மீட்க முடியாமல் போனது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், விவசாயியின் இந்த தகவல் பற்றி எவ்வித பதிலையும் இதுவரை புனேயை சேர்ந்த வேளாண் விளைபொருள் சந்தை தெரிவிக்கவில்லை.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.