முன்னொரு காலத்தில், கண்ணாயிரம் என்பவன் அரண்மனையில் வேலை செய்து வந்தான். அவனுக்கு திருமணம் நடந்தது. திருமணம் நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு அரண்மனைக்கு வந்தான்.
""உன் திருமணத்திற்கு என்னால் வர முடியாமல் போய்விட்டது. அதனால் உன் மனைவியை நாளை அந்தப்புரம் அழைத்து வா,'' என்றாள் அரசி.
அரசியிடம் தன் குறும்பைக் காட்ட வேண்டும் என்று நினைத்து, ""அரசியாரே! தங்கள் அழைப்பை கேட்டால், என் மனைவி மிகுந்த மகிழ்ச்சி அடைவாள். ஆனால்...'' என்று தயங்கிய அவன் தலையைச் சொறிந்தவாறு நின்றான்.
ஏதோ சொல்ல அவன் தயங்குகிறான் என்பது அவளுக்குத் தெரிந்தது.
""என்ன ஆனால்... எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்,'' என்றாள் அரசி.
""அரசியாரே! என் மனைவிக்கு காதுகேட்காது. உரத்த குரலில் கத்தினால்தான் அவள் காதில் விழும். மென்மையாகவும், இனிமையாகவும் பேசுபவர் நீங்கள். எப்படி என் மனைவியிடம் பேசுவீர்கள்?'' என்றான்.
""நான் எப்படியாவது உன் மனைவியுடன் உரத்த குரலில் பேசுகிறேன். நீ அவளை அழைத்து வா,'' என்றாள்.
தன் மனைவியிடம் வந்த அவன், அரசியின் அழைப்பைச் சொன்னான். அவள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். அரசியை பார்க்க ஆவலாக இருந்தாள்.
""அரசியாருடன் பேசுவதில் ஒரு சிக்கல் உள்ளது. அவருக்கு காது கேட்காது. உரத்த குரலில் பேசினால்தான் அவர்களுக்குக் காது கேட்கும். உன்னால் கத்திப் பேச முடியுமானால் சொல். உன்னை அரசியாரிடம் அழைத்துச் செல்கிறேன்,'' என்றான்.
""நான் உரத்த குரலில் எப்படியாவது அரசி யாருடன் பேசு கிறேன். என்னை அழைத்துச் செல்லுங்கள்,'' என்றாள்.
அடுத்த நாள் காலையில் தன் மனைவியுடன் அரண்மனைக்கு வந்தான்.
""இதுதான் அரசியாரின் அந்தப்புரம். நீயே சென்று உன்னை அறிமுகம் செய்துக்கொள். அவர்களுக்கு காது கேட்காது என்பதை மறந்து விடாதே!'' என்றான் கண்ணாயிரம்.
அவளும் உள்ளே சென்றாள்.
நடக்கப் போகும் வேடிக்கையை நினைத்துத் தனக்குள் சிரித்தபடி அங்கிருந்து சென்றான் கண்ணாயிரம்.
உள்ளே சென்ற அவள் அரசியாரைப் பணிவாக வணங்கினாள்.
""அரசியாரே! நான் கண்ணாயிரத்தின் மனைவி,'' என்று உரத்த குரலில் கத்தினாள். அந்தப்புரம் முழுவதும் அவள் குரல் கேட்டது.
"நாமும் உரத்த குரலில் பேசினால்தான் அவளுக்கு கேட்கும்' என்று நினைத்த அரசி, ""உன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்,'' என்று உரத்த குரலில் கத்தினாள்.
இப்படியே அவர்கள் இருவரும் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தனர்.
ஒருவரை விட இன்னொருவர் குரல் உயர்ந்து கொண்டே சென்றது.
அந்தப்புரத்திலிருந்த பணிப்பெண்கள் அனைவரும் அங்கே கூடி விட்டனர்.
"ஏன் அரசியாரும் இன்னொரு பெண்ணும் இப்படிக் கத்திப் பேசுகின்றனர் ஒன்றும் புரியவில்லையே' என்று குழம்பினர்.
அரசரும் இதைக் கேள்விப்பட்டார். தன் மனைவிக்கு என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லையே ... என்று அங்கு வந்தார்.
அரசியும், இன்னொரு பெண்ணும் உரத்த குரலில் கத்திப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.
""இங்கே என்ன நடக்கிறது? ஏன் இருவரும் இப்படிக் கத்திப் பேசுகிறீர்?'' என்று கோபத்துடன் கேட்டார்.
தன் குரலைத் தாழ்த்திக் கொண்ட அரசி, ""இவள் கண்ணாயிரத்தின் மனைவி. அவன் தான் தன் மனைவிக்கு காது கேட்காது என்று சொன்னான். அதனால்தான் இப்படிக் கத்திப் பேசுகிறேன்,'' என்றாள்.
இதைக் கேட்ட கண்ணாயிரத்தின் மனைவி, ""என்ன எனக்கா? அரசியாருக்குதான் காது கேட்காது என்று என் கணவர் சொன்னார். அதனால்தான் தொண்டை வரளும்படி கத்திப் பேசிக் கொண்டிருந்தேன்,'' என்றாள்.
அரசரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. தன்னை மறந்து, கலகலவென்று சிரித்தார்.
பக்கத்து அறையில் ஒளிந்திருந்த கண்ணாயிரம் சிரித்தப்படி வெளியே வந்தான்.
அரசியும், அவன் மனைவியும் கோபத்துடன் அவனை முறைத்தனர்.
அவர்களது கோபத்தில் இருந்து தப்பிக்க அரசரின் உதவியை நாடினான் கண்ணாயிரம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.