Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 10, 2016

‘ஆம்.. கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்திருக்கிறோம்!’- ஸ்டாலின்


'கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்திருக்கிறோம். இனிமேல் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வது எங்களுடைய பொறுப்பு என்று அனைத்து இடங்களிலும் நானே சொல்லி வந்திருக்கிறேன்' என்று என்.டி.டி.வி ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் திமுக பொருளார் மு.க.ஸ்டாலின்  கூறினார்.

என்டிடிவி தொலைகாட்சிக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில்,  திமுகவின் திட்டங்கள், பலம் குறித்து பேசினார்.

நீங்கள் தவறு செய்துவிட்டதாக ஊழல் விவகாரத்தில் தொழிற்துறையினரிடம் சொன்னீர்கள். ஊழல் என்பது ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. அதற்கு என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின்,  " வளர்ச்சி... வளர்ச்சி... ஒன்லி. கரப்ஷன், கலெக் ஷன் இல்லாமல் ஒரு கவர்மென்டை ஃபார்ம் பண்ணனும்னு சொல்லிட்டு, இன்றைக்கு தேர்தல் அறிக்கையிலேயே லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றப்போறோம் என்று சொல்லியிருக்கிறோம்.

நானே ஒவ்வொரு கூட்டத்திற்கும் சென்று, தெரிந்தோ, தெரியாமலேயோ அரசோ, எங்களுடையே கட்சிக்காரர்களோ தவறு செய்திருக்கலாம். இனிமேல் தவறுகள் நடக்காமல் காத்துக் கொள்வது எங்களுடைய பொறுப்பு என்று நானே அனைத்து இடங்களிலும் சொல்லி வந்திருக்கிறேன்."

வளர்ச்சி..வளர்ச்சி என்று கூறும் போது அதற்கு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறீர்கள்?

"தேர்தல் அறிக்கையிலேயே சொல்லியிக்கிறோம். வெளி மாநிலத்தில் இருந்து, வெளிநாட்டில் இருந்து தொழிற்சாலைகள் வரும்போது அவர்களுக்கு சில முன்னுரிமை கொடுக்கிறோம். அதோடு சலுகைகளும் கொடுக்கப்போகிறோம். ஒற்றைச் சாளர முறையில் 100 நாட்களில் எதையாவது முடித்துக் கொடுக்க வேண்டும் என்று பண்ணப்போறோம். உள்ளூர் பிரமுகர்கள் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கும்போது அவர்களுக்கு சில சலுகைகள் கொடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறாேம். இதனால்தான் வளர்ச்சியை முக்கியமாக வைத்துதான் பண்ணப்போறோம். ஏனென்றால், இளைஞர்கள் வந்து வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி என்று தான் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள், அடுத்து வேலைவாய்ப்பு கேட்கிறார்கள். இதனால் முதலில் இதனை நிறைவேற்றுவதுதான் எங்களுடையே லட்சியம், நோக்கமாக இருக்கும். "

தமிழகத்தில் முதல்வர் என்பது அணுக முடியாத நபராக இருக்கிறாரே, இதனால் மக்கள் மனநிலை மாறும் என்கிறீர்களா?

" 5 முறை கலைஞர்தான் முதலமைச்சராக இருந்திருக்கிறார். அவருடைய காலங்களில்தான் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. அதனால்தான் 6வது முறையாக கலைஞர்தான் முதலமைச்சராக வர வேண்டும் என்று நாங்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறோம். மக்களும் அதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். "


நீங்கள் துணை முதல்வர், உங்கள் தந்தை முதலமைச்சராக இருந்திருக்கிறீர்கள். மத்திய அரசுக்கும், மாநில அரசும் உள்ள உறவு எப்படி இருக்கிறது. தற்போது மோடி அரசுடனான உறவு எப்படி இருக்கிறது?

"மத்திய அரசும், மாநில அரசுக்கும் இடையேயான உறவு நல்லாதான் இருக்கும், அதில் எந்த பிரச்னையும் கிடையாது. பிரச்னைகள் அடிப்படையில்தான் சில கருத்துகளை தெரிவிப்பார்கள். மாநில அரசு வந்து மத்திய அரசிடம் சுமுகமாக சென்றுதான் சிலவற்றை செய்து கொள்ள வேண்டும். கொள்கை முடிவுகள் தனித்துவமானது."

மோடி பற்றி..

சொல்வதற்கு ஒன்றுமில்லை. நல்ல உறவு இருக்கிறது.

நீங்கள் ஏன் காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்கள்?

"ஏற்கனவே நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து இருக்கிறோம். இது முதல் தடவை அல்ல. ஏற்கனவே இருந்து இருக்கிறோம். இடையில் கூட்டணி முடிவுக்கு காரணம், இலங்கை தமிழர் பிரச்னையிலால்தான் கூட்டணியை விட்டு வெளியேறினோம். மற்றபடி ஒன்றுமில்லை."

நாடளுமன்றத்திலும் இந்த கூட்டணி தொடருமா?

"அது நாடாளுமன்ற தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது ஒன்றும் சொல்ல முடியாது."

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.