அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் சொந்த ஊரில் நடந்த விருந்து குறித்து கேள்வி எழுப்பியவருக்கு அடி விழுந்தது. இதுதொடர்பாக அமைச்சர் மகன் மீது வழக்குப் பதியப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் போட்டியிடும் அமைச்சர் சண்முகநாதனின் சொந்த ஊர் பண்டாரவிளை. நேற்று முன்தினம் அவரது சார்பில் கிராமத்தினருக்கு விருந்து அளிக்கப்பட்டதாக தகவல் பரவியது. அப்போது பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் ஆரோன் என்பவர், ''தேர்தல் விதிகளை மீறி எப்படி விருந்து போடலாம்,'' என, கேட்டார்.
இதில் அமைச்சரின் மகன் ராஜா மற்றும் நான்கு பேர் சேர்ந்து ஆரோனை இரும்பு கம்பியால் தலையில் தாக்கினர். காயம் அடைந்த ஆரோன் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அமைச்சரின் மகன் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.