வங்கதேச நாட்டில் உள்ள 11 மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் மின்னல் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வங்கதேச நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மின்னலின் தாக்கம் காணப்பட்டது. இங்குள்ள சிரஜ்காஞ்ச் பகுதியில் இருந்து 5 பேரும், பாப்னா, கிஷோர்காஞ்ச், பிரக்மன்பர்கியா ஆகிய பகுதிகளில் தலா 4 பேரும் பலியாகியுள்ளனர். ராஜ்ஷாகி பகுதியில் 2 பேரும், காஜிபூர், போக்ரா மற்றும் நாட்டோர் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரத்தில் டாக்காவின் ஜாட்ரபரி பகுதியில் இரண்டு குழந்தைகள் மின்னல் தாக்கியதில் பலியானார்கள். குழந்தைகள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது இந்த விபரீதம் ஏற்பட்டது. மேலும், மின்னல் தாக்கியதில் காயமடைந்த மூன்று சிறுவர்களுக்கு டாக்கா மருத்துவ கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களது வயல்களில் விவசாய வேலைகளை செய்து கொண்டிருந்தனர். இந்த மின்னலின் தாக்கம் இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்திலும் காணப்பட்டது. தினஜ்பூர் மாவட்டத்தின் ராய்காஞ்ச் பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.