Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 31, 2016

ஜெயலலிதா பணத்தை கொடுத்து பதவியை வாங்கியுள்ளார்..! சீமான்


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா, பணத்தை கொடுத்து பதவியை வாங்கியுள்ளார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா பணத்தை கொடுத்து பதவியை வாங்கியுள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கை நிறைவேற்ற 15 லட்சம் கோடி தேவைப்படும். ஏற்கனவே கடனில் சிக்கி தவிக்கும் தமிழகத்தில் அவர்களின் தேர்தல் அறிக்கை எப்படி சாத்தியம் ஆகும்.

அதிக அளவு பணம் விநியோகிக்கப்பட்டதாக கூறி அரவக்குறிச்சி, தஞ்சாவூர், சட்டமன்ற தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது வேடிக்கையானது, அது அவமானமானது. எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல், மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள முதல்வர் அணுகுமுறை வரவேற்கப்பட வேண்டியது என கூறினார்.

தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்றுள்ள ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்த சீமான், தற்போது ஜெயலலிதா பணத்தை கொடுத்து பதவியை வாங்கியுள்ளார் என்று குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.