Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 5, 2016

ஐஆர்சிடிசி இணையத்தில் 1 கோடி பயனாளர்கள் தகவல்கள் திருட்டு..! பின்னணி


இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தின் தகவல்கள் திருடப்பட்டு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய ரெயில்வேயின் இ-டிக்கெட் இணையதளமான ஐ.ஆர்.சி.டி.சி.யில் சுமார் ஒரு கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு உள்ளதாக அஞ்சப்படுகிறது என்று ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதனையடுத்து பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் அதிகரித்தது. இ-டிக்கெட் இணையதளமான ஐ.ஆர்.சி.டி.சி. இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் இணையதளமாகும். நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பரிமாற்றங்கள் நடைபெறுகிறது. ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பொதுமக்கள் அவர்களுடைய பான் கார்டு உள்ளிட்ட முக்கிய தகவல்களை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டது என்றதும் அச்சமானது வலுத்தது.

இது குறித்து மூத்த ரெயில்வே அதிகாரி ஒருவர், "திருடப்பட்ட ஆவணங்களை கொண்டு யாரேனும் போலியான ஆவணங்களை தயாரிக்க முடியும்" என்று கூறியுள்ளார்.

"இணையதளத்தின் தகவல்கள் மிகவும் மிதிப்புமிக்க ஆவணங்களாகும், தகவல்களை கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முடியும், குறிப்பிட்ட பயனாளர்களை இலக்காக இதனை அவர்கள் பயன்படுத்தலாம்" என்று ஐ.ஆர்.சி.டி.சி. தகவல்கள் தெரிவித்து உள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தியுள்ள அம்மாநில உள்துறை கூடுதல் செயலாளர் கே.பி. பாக்‌ஷி, இது தொடர்பாக முழு தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இணையதளம் ஹேக்கிங் செய்யப்படவில்லை என்று ஐ.ஆர்.சி.டி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி., பி.ஆர்.ஒ. சந்திப் தத்தா தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், மீடியா தகவலுக்கு மாறாக இணையதளம் ஹேக்கிங் செய்யப்படவில்லை. மூன்று நாட்களுக்கு முன்னதாக உளவுத்துறை சைபர் செல் எங்களுக்கு தெரிவித்த தகவலில் ஐ.ஆர்.சி.டி.சி. பெயரில் தகவல்கள் உலாவுவதாக குறிப்பிடப்பட்டது. நாங்கள் இதுதொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷனை அமைத்தோம். சைபர் செல் வழங்கிய தரவுகளின் நகலுக்காக ரெயில்வே போர்டு காத்திருக்கிறது, அதனைத் தொடர்ந்தே எங்களுடைய தரவுகள்தானா என்பதை அறிந்துக் கொள்ள முடியும். இதுவரையில் அது நடைபெறவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. இணையதளம் முற்றிலும் சரியாக இயங்குகிறது" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.