ஒரு பில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய சொகுசு கப்பல் இங்கிலாந்தில் இருந்து தனது பயணத்தை தொடங்க இருக்கிறது.
அமெரிக்க தொழிலதிபருக்கு சொந்தமான Harmony Of The Seas என்ற பெயரிடப்பட்ட இந்த கப்பல் தான் தற்போது உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் என பெயர் பெற்றுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனத்தினால் கடந்த 32 மாதங்களாக நடைபெற்று வந்த தயாரிப்புப் பணிகள் நேற்றோடு நிறைவடைந்து, இந்தக் கப்பல் நேற்று இங்கிலாந்தில் உள்ள Southampton துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.
ஒரு பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்த கப்பலின் நீளம் 1,188 அடி, 215 அடி அகலம் மற்றும் 2,27,000 டன் எடை உடையதாகும். இந்த சொகுசு கப்பலில் 77 நாடுகளை சேர்ந்த 2,100 பணியாளர்கள் உள்ளிட்ட 8,880 பேர் பயணிக்கும் வகையில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த கப்பலை தரையில் நிறுத்தினால் பிரான்ஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்தை மிஞ்சும் வகையில் மிக பிரமாண்டமான உயரம் கொண்டது. நீச்சல் குளங்கள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்குகள், கேளிக்கை மையங்கள் என பயணிகளுக்கு தேவையான அத்தனை வசதிகளும் இந்த சொகுசு கப்பலில் இடம்பெற்றுள்ளன.
உலகையே வியக்க வைத்துள்ள இந்த சொகுசு கப்பல் பயணிகளை ஏற்றிக்கொண்டு எதிர்வரும் வரும் 22ம் தேதி முதன் முதலாக நெதர்லாந்து நாட்டிற்கு பயணமாகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.