Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 13, 2016

மல்லையாக்கள் தப்பித்தால் இந்திய வங்கிகளுக்கு இதுதான் நடக்கும்!


ஜெயபால் தஞ்சையில் நகரத்திற்கு சற்று தள்ளி இருக்கும் பகுதியில் வசிப்பவர். சமீபத்தில்தான் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

அவர் வசிக்கும் பகுதியிலேயே ஒரு புதிய தலைமுறை வங்கி (New Generation Bank) இருக்கிறது. ஆனால் அதில் அவர் வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை, 6 கி.மீ தள்ளி இருக்கும் பொதுத்துறை வங்கியில்தான் கணக்கு வைத்திருக்கிறார். இத்தனைக்கும் அவருக்கு ஓய்வூதிய பணம் அந்த வங்கியில் வரவு வைக்கப்படுவதில்லை. வேறொரு வங்கியில்தான் வரவு வைக்கப்படுகிறது. மாதத்துக்கு ஒரு முறை தனது ஓய்வூதியம் வரும் வங்கிக்கு சென்று, பணத்தை எடுத்து, மீண்டும் சில கி.மீ க்கள் பயணம் செய்து, அந்த பொதுத்துறை வங்கியில், தனது சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்வார். ஒரே காரணம் அந்த வங்கிக்கும், அவருக்கும் உள்ள உணர்வுபூர்வமான பிணைப்பு.

அவர் வீடு கட்ட அந்த வங்கிதான் கடன் அளித்தது. தனது மகனுக்கு கல்விக் கடன் அந்த வங்கிதான் அளித்தது. அதைத்தாண்டி அந்த வங்கியின் ஊழியர்கள் அனைவரும் அவருக்கு நல்ல பழக்கமானவர்கள். அவர் அந்த பிணைப்பை இழக்க விரும்பவில்லை. அதற்காக சில கி.மீட்டர் பயணம் செய்யவும் தயாராக இருக்கிறார்.

ஜெயபாலின் மனநிலைதான் பெரும்பாலான இந்தியர்களின் மனநிலை. அவர்களுக்கு வங்கி என்பது வெறும் பணப்பரிமாற்றம் செய்யும் இடம் மட்டும் கிடையாது. ஒவ்வொரு இந்தியனுக்கும் வங்கிகளுடன் ஒரு உணர்வுபூர்வமான பந்தம் இருக்கும். ஏனெனில் நமது வேர்கள் அப்படி.

எனக்கு தெரிந்த ஒருவர், தருமபுரியில் வளர்ந்துவரும் தொழில் அதிபர். ஒரு நாள் தன்னுடன் வணிகத்தில் ஈடுபடுபவருக்கு நான்கு லட்ச ரூபாய்க்கான காசோலையை கொடுத்துவிட்டார். ஆனால் அவரின் வங்கிக் கணக்கில் அன்று ரூபாய் 3.90 லட்சம்தான் பணம் இருந்தது. அதை அவர் கவனிக்கவில்லை. அந்த காசோலை வங்கிக்கு வந்தது. பல்லாண்டுகளாக அந்தவங்கியில் கணக்கு வைத்திருக்கும் அந்த தொழில் அதிபரின் காசோலையை பவுன்சாக்க விரும்பவில்லை அந்த வங்கி மேலாளர். தொழில் அதிபருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, தன் கையிலிருந்து ரூபாய் பத்தாயிரத்தை அவர் கணக்கில் வரவு வைத்து. அந்த செக்கை கிளீயர் செய்தார்.

இதுதான் இந்தியாவில் வங்கிக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் உள்ள பந்தம். அது பணத்திற்கு அப்பாற்பட்டது.

சரி... ஏன் இப்போது இந்த சம்பவங்கள் எல்லாம் என்கிறீர்களா...? விஷயம் இருக்கிறது. மத்திய அரசு, மீண்டும் வளர்ச்சி என்ற காரணத்தை கூறி, 27 வங்கிகளை 6 பெரிய வங்கிகளாக இணைக்க திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.