Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 24, 2016

ஜீரண சக்தியை தூண்டும் இஞ்சித் துவையல்


தேவையான பொருட்கள் :

மா இஞ்சி - 50 கிராம்,
சாதாரண இஞ்சி - 50 கிராம்,
புளி - பாதி எலுமிச்சை அளவு,
அச்சு வெல்லம் - 1,
உப்பு - தேவையான அளவு,
பச்சை மிளகாய் - 5,
கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க

செய்முறை :

* இஞ்சியைத் தோல் எடுத்து பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* பச்சை மிளகாயையும் பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், இஞ்சியை நன்கு வதக்கவும். இஞ்சியின் பச்சை வாசனை போய், நல்ல மனம் வரும். அப்போது இறக்கி ஆற விடவும்.

* பின்னர் இதனுடன், புளி, உப்பு, வெல்லம் சேர்த்து மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்கவும்

* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த துவையலில் கொட்டவும்.

* இதை தினமும் இரண்டு டீஸ்பூன் அளவு உணவில் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெருகும். நோய்கள் அண்டாது. இனிப்பு சுவை பிடிக்காதவர்கள் வெல்லத்தை தவிர்த்து விடலாம், புளி கொஞ்சம் கூட சேர்க்கலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.